india

img

கேரளாவின் மாற்று அணுகுமுறை பட்ஜெட் குறித்து முதல்வர் கருத்து....

திருவனந்தபுரம்:
துயரங்களை சமாளிக்க கேரளாவின் மாற்று அணுகுமுறையே நிதி அமைச்சர் டாக்டர். தாமஸ் ஐசக்முன்வைத்த 2021-22 வரவு செலவுத் திட்டத்தின் முக்கியஅம்சம் என முதலமைச்சர் பினராயி விஜயன் கூறினார்.

2019 வாக்கில், சர்வதேச மற்றும் தேசிய மட்டங்களில் வளர்ச்சி விகிதம் குறைந்து வருகிறது. இதுமாநிலத்தையும் பாதித்தது. கோவிட் தொற்றுநோயின்வருகையால் இந்த நெருக்கடி மேலும் அதிகரித்தது. சமூக பொதார துறைகளை வலுப்படுத்தி அதைக்கடக்க மாநில அரசு முயற்சிக்கிறது. அதற்கான நடைமுறை சாத்தியத்திற்கு இந்த பட்ஜெட்டின் மூலம் வழிகாணப்படுகிறது. கேரளாவை ஒரு மாதிரி அறிவு சமுதாயமாக மாற்றுவதும் பட்ஜெட்டின் நோக்கமாகும். ஒரு வருடத்தில் எட்டு லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதும், நீண்ட காலத்திற்கு புதிய வேலைவாய்ப்புகளுக்கான வாசலைத் திறப்பதுமே  பட்ஜெட்திட்டங்கள். எல்டிஎப் அரசாங்கத்தின் அணுகுமுறை பொருளாதார சமத்துவத்தை வலியுறுத்துவதன் மூலம்வகைப்படுத்தப்படுகிறது, அதே நேரத்தில் பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுத்து பலப்படுத்துகிறது.இந்த அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கையின் அடிப்படை என்னவென்றால், துன்பப்படும் மக்களின் நலனை உறுதி செய்வதற்கும், நாட்டின் அனைத்துவகையான வளர்ச்சிக்கும் விரிவான திட்டங்களை வகுப்பதற்கும் அது அயராது உழைக்கிறது. அந்த நம்பிக்கையை இன்னும் உறுதியாகப் பாதுகாப்பதில்அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை பட்ஜெட் மீண்டும் உறுதிப்படுத்துகிறது. 

                                              ***************

கேரள அரசின் நிதிநிலை அறிக்கையில் கல்வி வளர்ச்சிக்கான திட்டங்கள்

கேரள நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கை 2021-2022 இல் கல்வி வளர்ச்சிக்கென ரூ.120 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  ஐடி அடிப்படையிலான கற்றலுக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஆசிரியர் பயிற்சி அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

புதிய கட்டிடங்களில் புதிய தளவாடங்களுடன் கூடிய ஆய்வகம் நிறுவ ஒரு திட்டம் வகுக்கப்படும். பழைய தளவாடங்கள் புதுப்பிக்கப் பட்டு மீண்டும் பயன்படுத்தப்படும். அனைத்து பள்ளிகளிலும் சோலார் பேனல்கள் நிறுவ ரூ.73 கோடி ஒதுக்கப்படுகிறது.ஐடி அடிப்படையிலான கற்றலுக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஆசிரியர் பயிற்சி.பின்தங்கிய குழந்தைகள் மற் றும் பகுதிகளுக்கான கவனம் போன்ற நிகழ்ச்சிகள்.பின்தங்கிய குழந்தைகள் மற்றும் பகுதிகளுக்கான கவனம் செலுத்தும் திட்டங்கள்.ஸ்ருதி பாடம், இந்திய சைகைமொழியில் பயிற்சி, தேன்கூடு போன்ற மாற்றுத்திறன் மாணவர் களுக்கான திட்டங்கள்,படிப்பில் சிறந்து விளங்கும் குழந்தைகளுக்கான சிறப்புத் திட்டங்கள்.குழந்தைகளின் திறனை அடையாளம் காண கே-டாட் ஆன்லைன் ஆப்டிட்யூட் டெஸ்ட். தகவல் தொழில்நுட்ப வசதிகளை முழுமையாகப் பயன்படுத்துவதை உறுதி செய்ய கைட் நிறுவனத்திற்கு ரூ.30 கோடி ஒதுக்கீடு.

பள்ளி சீருடைக்கு ரூ.105 கோடி, மதிய உணவு விநியோகத்திற்காக ரூ.526 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.சாக்சரதா (கல்வியறிவு) மிஷன் –க்கு ரூ.18 கோடிதொழிற்கல்வி / மேல்நிலை கல்வித் துறைக்கு ரூ.111 கோடிஅனைத்து பள்ளிகளிலும் ஆலோசகர் நயமனம். ஆலோசகர்களின் மதிப்பூதியம் ரூ.24000  ஆக உயர்த்தப்பட்டுள்ளதுமழலையர் பள்ளி ஆசிரியர்கள்/ ஆயாக்களுக்கு 10 வருட அனு
பவத்துக்கு குறைவாக உள்ளவர்களுக்கு ரூ.500 பத்தாண்டுகளுக்கு மேல் அனுபவம் உள்ளவர்களுக்கு ரூ.1000  சம்பளம் அதிகரிப்பு.