பெங்களூரு:
புதிய வேளாண் சட்டங்களைதிரும்பப் பெற வலியுறுத்தி, பெங்களூருவில் விவசாயிகள் பிரம்மாண்ட பேரணி நடத்தியுள்ளனர்.பல ஆயிரக்கணக்கில் திரண்ட விவசாயிகள் பெங்களூரு சிட்டிரயில் நிலையத்திலிருந்து பேரணியாக புறப்பட்டு, கர்நாடக அரசின் தலைமைச் செயலகமான விதான் சவுதாவை முற்றுகையிட்டுள்ளனர்.
போலீசார் அவர்களை அனுமதிக்காத நிலையில் அருகிலுள்ள சுதந்திர பூங்காவில் அமர்ந்து, தொடர் போராட் டத்தில் ஈடுபட்டுள்ளனர். வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை நாடு முழுவதும் விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ள விவசாயிகள், தற்போது பெங்களூருவை நோக் கித் திரும்பியுள்ளனர்.“வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை தென்இந்தியாவில் விரிவுபடுத்த வேண்டும். குறிப்பாக, பெங்களூருவை இன்னொரு தில்லியாக மாற்ற வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். இதற்காக கர்நாடக கிராமங்களில் இருக்கும் விவசாயிகளை டிராக்டர்களில் திரட்டி பெங்களூரு எல் லையை முற்றுகையிடுவோம்” என்று கிசான் யூனியன் தலைவர்ராகேஷ் திகாயத் சில நாட்களுக்கு முன்பு அழைப்பு விடுத்திருந்தார்.
இதன் பின்னணியிலேயே, கர்நாடக விவசாயிகள் திங்களன்று பெங்களூரு சிட்டி ரயில்நிலையத்தில் திரண் விதான்சவுதாவை நோக்கி பேரணியாகசென்றுள்ளனர். விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு தொழிலாளர்கள் அமைப்பை சேர்ந்தவர்கள், மாணவ - மாணவிகளும் போராட் டத்தில் குவிந்துள்ளனர்.இதனிடையே, போலீசார் அனுமதிக்காத நிலையில், அவர்கள் சுதந்திர பூங்காவில் அமர்ந்து, புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும், அந்த சட்டங்களைக் கொண்டு வந்த மத்தியபாஜக அரசைக் கண்டித்தும்முழக்கங்களை எழுப்பியுள்ளனர். சுதந்திர பூங்காவில் நீண்ட நேரமாக போராட்டம் நடந்த நிலையில், விவசாயிகள் சிலர் சாலையோரமே அடுப்பு மூட்டி சமையலிலும் ஈடுபட்டனர். விவசாயிகளின் இந்த போராட்டத்தால் மெஜஸ்டிக், விதான் சவுதா மற்றும் அதைச்சுற்றி உள்ள பல்வேறு சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் உண்டானது. வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்துநின்றன.