india

img

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிக்கிறது... பாஜக மீது பாஜக அமைச்சரே அதிரடி குற்றச்சாட்டு....

மைசூரு
‘அகில பாரதிய சாரண சரண சாகித்திய பரிஷத்’ என்னும் அமைப்பு, மைசூருவில் கருத்தரங்கம் ஒன்றை நடத்தியது. ‘தேசிய ஒற்றுமை மற்றும் மண்டல சுதந்திரம்’ என்னும்பெயரில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில் பாஜகவைச் சேர்ந்தவரும் கர்நாடக மாநில நீர்ப்பாசனத்துறை அமைச்சருமான ஜே.சி. மதுசாமி பங்கேற்று உரையாற்றியுள்ளார்.

இவர், மாநில அரசுகளின் மீதான மத்திய அரசின் சர்வாதிகார அணுகுமுறை, நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாகவும் பிரிவினைவாதத்தை தூண்டுவதாகவும் உள்ளது என்று சொந்தக் கட்சியையே விமர்சித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

“பாஜகவினராகிய நாம் இந்திரா காந்திபற்றி விமர்சனம் செய்யும்போது, ஏற்கனவே முன்னேறியவர்களை கீழே இழுத்து ஏற்கெனவே பின் தங்கி இருப்பவர்களுக்கு ஈடாக மாற்றுகிறோர் என்போம். அதாவது ஒரு பங்களாவை இடித்து அங்கு வசிப்பவரை குடிசைவாசிகள் உடன் வாழ்க்கை நடத்த சொல்லி இதுதான் சமூகநீதி என்று சொல்வார் என்று நாம்விமர்சனம் செய்வோம். அது அல்ல சமூகநீதியல்ல. பின் தங்கி இருப்பவர்களையும் உயரத் துக்கு கொண்டு செல்வதுதான் சமூகநீதி. இப்போது என்ன நடக்கிறது. மாநில அரசின் அனைத்து அதிகாரங்களையும் மத்திய அரசு எடுத்துக்கொள்கிறது . மத்திய மற்றும் மாநில அரசு ஆகியோருக்கு பங்கிட்டுக் கொள் வதற்காக வழங்கப்பட்டுள்ள கன்கரன்ட் சப்ஜெக்ட் விஷயங்களையும் மத்திய அரசு ஆக்கிரமித்துக் கொள்கிறது.

மருத்துவ கல்விக்கு நீட் நுழைவுத்தேர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது கர்நாடகாமற்றும் தமிழகம் போன்ற மாநிலங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. நான்கு முறை எம்எல்ஏவாக இருந்துள் ளேன். அமைச்சர் என்ற முறையிலும் எனதுகருத்து இதுதான். மத்திய அரசு சர்வாதிகார தனமாக நடந்து கொள்வதுதான் பிராந்தியவாதம் அதிகரிப்பதற்கான முக்கிய காரணம். இதை உறுதியாக சொல்ல முடியும்” என்று மதுசாமி கூறியுள்ளார்.