பெங்களூரு:
கர்நாடக மாநிலத்தில் ‘நியாஸ்’(Niyaz) ஹோட்டல் நிறுவனம் பிரபலமான ஒன்றாகும். பெங்களூரு நகரம்முழுவதும் பல கிளைகளை கொண்டிருக்கும் இந்த உணவகம் பிரியாணிஉணவுத் தயாரிப்புக்கு பெயர்பெற்றதாகும். இந்நிலையில், ‘நியாஸ்’ உணவகம், அண்மையில் தனது சமூக வலைத்தள பக்கங்களில் விளம்பர போஸ்டர் ஒன்றை பகிர்ந்திருந்தது. சாமியார் ஒருவர், இந்த ஹோட்டலின் பிரியாணியை ருசித்துப் பார்த்து விட்டு,தனது சீடர்களிடம், “நீங்கள் எனக்காக தியாகம் எதுவும் செய்ய வேண்டாம், இந்த நியாஸ் ஹோட்டலின் பிரியாணியைத் தந்தால் போதும்”என சொல்வதாக அந்த போஸ்டர்இருந்தது. மேலும், எங்கள் பிரியாணி மற்ற பிரியாணிகளுக்கு ‘அகம் பிரம் மாஸ்மி’ (தெய்வீகமானது) என்றும் ஹோட்டல் நிறுவனம் போஸ்டரில் குறிப்பிட்டு உள்ளது.
இந்நிலையில், ‘நியாஸ்’ உணவகத்தின் இந்த பிரியாணி விளம்பரம், இந்துமத உணர்வுகளை காயப்படுத்தி விட்டதாக கூறி பஜ்ரங் தளம், விஸ்வ ஹிந்து பரிஷத் போன்ற இந்துத்துவா அமைப்புக்கள் கலகத்தில்இறங்கியுள்ளன. நியாஸ் ஹோட்டல்நிறுவனத்திற்கு மிரட்டல் விடுத் துள்ளன.பஜ்ரங் தளம், விஎச்பி கூட்டத்தால், நியாஸ் உணவகம் எந்நேரமும்தாக்கப்படலாம் என்பதால், உணவகக் கிளைகளை மூட உத்தரவிட்டகாவல்துறையினர் உத்தரவிட்டுள்ளனர். உணவகங்கள் முன்பு போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.இதனிடையே சர்ச்சைக்குரிய விளம்பரத்தை தனது சமூகவலைதள பக்கத்தில் இருந்து நீக்கியிருக்கும் ஹோட்டல் நிர்வாகம், இந்து மத உணர்வுகளை காயப் படுத்தியிருந்தால், அதற்கு மன்னிப்புகேட்பதாகவும் அறிவிப்பு வெளியிட் டுள்ளது.