பெங்களூரு:
கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்துள்ளது.
கர்நாடகத்தில் தற்போது பாஜக ஆட்சி தான் நடைபெற்று வருகிறது. இருந்தும் அந்தக் கட்சி உள்ளாட்சித் தேர்தலில் 3-ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டு உள்ளது.காங்கிரஸ் கட்சியும், மதச்சார்பற்ற ஜனதாதளமும் பெருவாரியான இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற் றுள்ளன.கர்நாடகத்தில் 8 மாவட்டங்களுக்கு உட்பட்ட 10 நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த ஏப்ரல் 27 அன்று வாக் குப்பதிவு நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை கடந்த ஏப்ரல் 30 அன்று நடைபெற்ற நிலையில், இந்தநகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு உட்பட்ட263 வார்டுகளில் 120 வார்டுகளில் காங்கிரஸ் கட்சியும், 66 வார்டுகளில் மதச்சார் பற்ற ஜனதாதளம் கட்சியும் வெற்றி பெற்றுள்ளன. ஒட்டுமொத்தமாக இந்த இரு கட்சிகளும் 186 வார்டுகளைக் கைப்பற்றிய நிலையில், பாஜக வெறும்57 வார்டுகளை மட்டுமே பிடித்துள்ளது.
முதல்வர் எடியூரப்பா, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறைஅமைச்சர் கே.எஸ். ஈஸ்வரப்பா ஆகியோரின் சொந்த மாவட்டங்களிலேயே பாஜக மோசமான தோல்வியை அடைந்துள்ளது. இங்குள்ள 34 இடங்களில் 30 இடங்களில் பாஜக தோல்வி அடைந்துள்ளது.