india

img

குடும்பத்தினருடன் சேர்ந்து அடித்துச் சித்ரவதை... பாஜக நிர்வாகி வீடு முன்பு தர்ணா நடத்திய மனைவி...

பெங்களூரு:
முதல்வரான பிறகு, முதன்முறையாக பிரதமர் நரேந்திரமோடியை தில்லியில் சந்தித்த, தமிழக முதல்வர்மு.க. ஸ்டாலின், அவரிடம் வைத்த30-க்கும் மேற்பட்ட கோரிக்கைகளில், கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதற்கு அனுமதி அளிக்கக் கூடாது என்பதுவும் ஒன்றாகும்.

இந்தக் கோரிக்கை கர்நாடகஅரசியலில் புயலைக் கிளப்பியுள் ளது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இவ்விஷயத்தில் பிரதமர் சந்தித்து முறையிடும் நேரத்தில், கர்நாடக பாஜக அரசு என்ன செய்கிறது? என்று அங்குள்ள எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்ப ஆரம்பித்துள் ளன. அந்த வகையில், மதச்சார்பற்ற ஜனதாதளம் தலைவரும், கர்நாடக முன்னாள் முதல்வருமான எச்.டி.குமாரசாமியும் முதல்வர் எடியூரப்பாவுக்கு எதிராக விமர்சனங்களை வைத்துள்ளார்.

அதில், “எனது ஆட்சியில்தான் அணைக் கட்டும் வேலைகளை ஆரம்பித்தேன். இப்போது கர்நாடகாவில் பாஜக ஆட்சி, மத்தியிலும் அவர்கள் ஆட்சி. ஆனால் மேகதாது அணையைக் கட்டவில்லை. கர்நாடக நலன் காப்பதில் பாஜகதோல்வியடைந்துள்ளது. இதைமாநில மக்கள் கவனிக்க வேண்டும்”என்று கூறியுள்ளார். அதேநேரம் காவிரி விஷயத்திற்காக தமிழ் நாடும் - கர்நாடகமும் மோதிக் கொள்ளக் கூடாது என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்ங.“அரசியல் சாசனத்தின் 8-வதுஅட்டவணையில் உள்ள அனைத்து மொழிகளையும் மத்திய ஆட்சி மொழியாக்க தான் முயற்சி மேற்கொள்ளப் போவதாக மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இந்த விஷயத்தில் அவரோடு நான் கை கோர்க்கிறேன். ஆனால் அண்ணன் - தம்பிகளாக இருக்க வேண்டிய இரு மாநிலமக்களும், காவிரிக்காக மோதலில் ஈடுபடுவதால் லாபமில்லை. தென் இந்திய மாநிலங்களின், மொழி, கலை, கலாச்சார விஷயங்களில், இப்போதைய ஒன்றிய அரசு இடையூறு செய்து வருகிறது. இந்த நிலையில், கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களும், காவிரி விஷயத்தால் மோதிக் கொள்ளக் கூடாது. நமது, மாநில நான்காக்க, நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும். சகோதரத்துவத்தின் அடிப்படையில் காவிரி பிரச்சனையை தீர்த்துக்கொள்ள வேண்டும். இந்த ஒரு புதுமையான முயற்சியை மேற்கொண்டு, நாம் ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டும். இதை மு.க. ஸ்டாலின் ஆட்சிக்காலத்தில் இருந்து தொடங்கலாம்”என்று குமாரசாமி குறிப்பிட்டுள்ளார்.