அகமதாபாத்:
பாங்க் ஆப் இந்தியாவில் ரூ. 678 கோடியே 93 லட்சம்மோசடி செய்ததாக குஜராத்தைச் சேர்ந்த எண்ணெய் நிறுவனம் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுதொடர்பாக பாங்க் ஆப் இந்தியா புகாரின் பேரில்சிபிஐ வழக்குப்பதிவு செய் துள்ளது. குஜராத்தைச் சேர்ந்த விமல் எண்ணெய் நிறுவனம், மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இயங்கி வருகிறது. இந்த நிலையில் இந்நிறுவனம் தங்களது வங்கியில் ரூ. 678 கோடியே 93 லட்சம் அளவுக்கு மோசடி செய்துள்ளதாக பாங்க் ஆப் இந்தியா அளித்த புகாரின் பேரில் சிபிஐ அதிகாரிகள் விமல் எண்ணெய் நிறுவனம் இயங்கும் 6 இடங்களில் அதிரடியாக சோதனை செய்தனர். இந்த சோதனைக்குப் பின்னர் விமல் எண்ணெய் நிறுவனம் மற்றும் அந்நிறுவனத்தின் இயக்குநர்களான ஜெயேஷ்பாய் சாண்டுபாய் படேல், முகேஷ்குமார் நாரன்பாய் படேல்,டிடின் நாராயன்பாய் படேல் மற்றும் மோனா ஜிக்னேஷ் பாய்ஆச்சார்யா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் 2014 முதல் 2017 வரையிலான காலகட்டத்தில் மாலாபைட் நடவடிக்கைகள் மூலம்கூட்டமைப்பு வங்கிகளை ஏமாற்றியுள்ளதாக சிபிஐ செய்தித்தொடர்பாளர் ஆர்.சி. ஜோஷி தெரிவித்துள்ளார். மேலும், வங்கி நிதிகளை மடைமாற்றுதல், மோசடி பரிவர்த்தனைகளை மேற்கொள்ளுதல் என பல்வேறு வழிகளில் பாங்க் ஆப் இந்தியாவை விமல் எண்ணெய் நிறுவனம்ஏமாற்றியதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.