india

img

18 வயதினருக்கு மே 1 முதல் போடுவதற்கு தடுப்பூசி எங்கே? எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் கேள்வி....

புதுதில்லி:
கொரோனா தடுப்பூசிக்கான மூன்றாம் கட்டத்தில், 18 முதல் 44 வயதுடையவர்களுக்கு மே 1 முதல் தடுப்பூசிகள் வழங்கப்படும் என்று மத்திய பாஜக அரசு அறிவித்துள்ளது. 

இதற்கான ஆன்லைன் முன்பதிவும் புதன்கிழமையன்று துவங்கியுள்ளது.இந்நிலையில், தடுப்பூசி இருப்பு இல்லாததால், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மே 1 முதல் தடுப்பூசி போடமுடியாது என்று ஆம் ஆத்மி தலைமையிலான தில்லி அரசு, சிவசேனா தலைமையிலான மகாராஷ்டிரா மாநில அரசு, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான ஜார்க்கண்ட் அரசு மற்றும் ஆந்திரா, தெலுங்கானா, மேற்குவங்கஅரசுகள்  காங்கிரஸ்  தலைமையிலான சத்தீஸ்கர், ராஜஸ்தான், பஞ்சாப் மாநில அரசுகள் என 9 மாநில அரசுகள் அறிவித்துள்ளன.தடுப்பூசி உற்பத்தியாளர்கள் தங்களுக்கு தேவையான மருந்தை அனுப்ப முடியாது என்று தெரிவித்துவிட்டதாகவும், காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு உரியதடுப்பூசிகளை வழங்க விடாமல், மத்திய பாஜக அரசுஅனைத்தையும் அபகரித்து வருவதாகவும் ஏற்கெனவே இந்த மாநிலங்கள்குற்றம் சாட்டியிருந்தன.  இந்நிலையில்,மோடி அரசு அறிவித்தாலும், தங்களிடம் இருப்பு இல்லாததால், மே 1 முதல்18 வயது முதல் 44 வயது உடையவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை செயல்படுத்த முடியாது என்று மேற்கண்ட 6 மாநிலங்களும் கூறியுள்ளன.