மத்திய அமைச்சரவை இன்று மாலை 6 மணிக்கு விரிவாக்கம் மற்றும் மாற்றம் செய்யப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்த 43 பேர் அமைச்சர்களாக இன்று பதவியேற்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் மத்திய அமைச்சரவையிலிருந்து பாவுல் சுப்ரியோ, அஸ்வினி சௌபே, பிரதாப் சாரங்கி, சதானந்த கவுடா, ரமேஷ் பொக்ரியால், திபாஸ்ரீ சௌத்ரி, சந்தோஷ் கங்வார், தாவர்சந்த் கெலாட், தோட்ரே சஞ்சய் ஷாம்ரோ, ரத்தன் லால் கட்டாரியா, ராவ்சாகேப் தன்வே ஆகிய 11 அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர். அதேபோல், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தற்போது தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.