india

img

‘தலித்தின் மகளும் இந்த தேசத்தின் மகளே..... தில்லியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொலைக்கு தலைவர்கள் கண்டனம்....

புதுதில்லி:
தில்லியில் 9 வயது தலித் சிறுமி பாலியல் வன்கொலை செய்யப்பட்ட கொடூரத்திற்கு நாட்டின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

குற்றவாளிகளைக் கடுமையாகத் தண்டிப்பதன் மூலம் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி வழங்கப்பட்டாக வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.தில்லி கண்டோன்மெண்ட் பகுதியைச் சேர்ந்த 9 வயது தலித் சிறுமி, அருகிலுள்ள மயானத்தில் குடிநீர் பிடிக்கச் சென்ற நிலையில், அங்கிருந்த பூசாரிஉள்ளிட்ட 4 பேர் சிறுமியை பாலியல்வல்லுறவுக் கொடுமைக்கு உள்ளாக்கியதுடன், அச்சிறுமி மீது மின்சாரத்தைப் பாய்ச்சி படுகொலை செய்த சம்பவம்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகள் சிறுமியை கொலை செய்ததோடு, அவரது தாயாரை ஏமாற்றி,சம்பவத்தை வெளியே கூற வேண்டாம்என்று தடுக்கும் முயற்சியிலும் இறங்கியுள்ளனர்.

ஆயினும் பாதிக்கப்பட்ட தலித் குடும்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், உண்மைகளை மறைக்கும் விதமாக உ.பி. மாநிலம் ஹத்ராஸில் நடந்ததுபோலவே தில்லிபோலீசாரும் சிறுமியின் பிணத்தைக் கைப்பற்றி, அவசர அவசரமாக எரிக்க வைத்துள்ளனர். “உடற்கூராய்வு தெளிவான முடிவுகளை அளிக்கவில்லை” என்று கூறி குற்றவாளிகளைத் தப்பவிடும் வேலையிலும் காவல்துறையினர் இறங்கியுள்ளனர்.பிரதமர் மோடி - உள்துறை அமைச்சர்அமித்ஷா ஆகியோருக்கு நெருக்கமான ராகேஷ் அஸ்தானா தில்லி காவல்துறை ஆணையராக பொறுப்பேற்ற சில நாட்களிலேயே இச்சம்பவம் நடந்திருப்பதால், தங்களுக்கான கவுரவப் பிரச்சனையாக கருதி, தில்லி கொடூரத்தை மூடி மறைக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

அதற்கேற்பவே, பாதிக்கப்பட்ட தலித் குடும்பத்தினர் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் திரண்டு நடத்திய மறியலுக்குப் பின்னரே, ராதேஷ்யாம், குல்தீப்,லட்சுமி நாராயண், சலீம் ஆகிய குற்றவாளிகள் 4 பேர் மீதும் 302, 376 ஆகியபிரிவுகளின் கொலை மற்றும் பாலியல்வல்லுறவு வழக்குப் பதிவு செய்யப்பட் டுள்ளது.இந்நிலையில், “தில்லி காவல் துறை நேரடியாக உங்கள் அமைச்சகத்தின் கீழ் இருந்தாலும் இந்த வழக்கில்நீங்கள் இன்னும் தலையிடாதது வருத்தமளிக்கிறது. நீதி வழங்கப்படுவதை உறுதிசெய்யுங்கள்” என்று மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தலித் சிறுமி பாலியல் வன்கொலைக்கு காரணமானவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்றுதில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.“தில்லியில் சட்டம் - ஒழுங்கை இன் னும் வலுப்படுத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களை நான் நேரில்சந்தித்து, அவர்களுக்கு நீதி கிடைக்கஆவன செய்வேன்” என்று கெஜ்ரிவால் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். ரூ. 10 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ள அவர்,நீதி விசாரணைக்கும் உத்தரவிட்டுள் ளார்.இதனிடையே சிறுமியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி,“ஒரு தலித்தின் மகளும் இந்த தேசத்தின் மகளே” என்று உருக்கத்துடன் கூறியுள்ளார். “சிறுமியினுடைய பெற்றோரின் கண்ணீர் ஒன்றை தான் உணர்த்துகிறது. அது அவர்களின் மகளுக்கு.. இந்தநாட்டின் மகளுக்கு நீதி கிடைக்க வேண்டும்... என்பதுதான்! நீதியைத்தேடிய பயணத்தில் நான் அவர்களுடன் இருப்பேன்” என்றும் தெரிவித்துள்ளார். 

                                                        *****************

அமித்ஷா அறிக்கை தந்து விட்டால்மொட்டையடித்துக் கொள்கிறேன்!

தலித் சிறுமி பாலியல் வன்கொலை தொடர்பாக, தில்லி காவல்துறைக்குப் பொறுப்பான உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று திரிணாமுல் எம்.பி. டெரிக் ஓ பிரையன் கோரிக்கை விடுத்துள்ளார். 
‘இந்தியா டுடே’ டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில் இதுதொடர்பாக பேசியிருக்கும் டெரிக் ஓ பிரையன், “நாடாளுமன்றத்தில் நாட்டின் பிரதமரை, உள்துறை அமைச்சரை பார்க்க முடியவில்லை. நான் என்ன செய்வது என்று யாராவது சொல்ல முடியுமா? தில்லி காவல்துறை ஆணையராக தனக்குப் பிடித்த அதிகாரியை அமித் ஷா நியமித்தார். இப்போது தில்லியில் 9 வயது தலித் பெண் குழந்தை பாலியல் வன்கொலை செய்யப்பட்டுள்ளார். இதுபற்றி உள்துறை அமைச்சர் பதிலளிக்க வேண்டுமா? இல்லையா?” என்று கேள்வி எழுப்பியுள்ள டெரிக் ஓ பிரையன், “அமித் ஷா, மாநிலங்களவைக்கோ, மக்களவைக்கோ வந்து 9 வயது தலித் குழந்தை வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டது பற்றி அறிக்கை அளித்து விட்டால், உங்கள் நிகழ்ச்சியிலேயே, நான் தலையை மொட்டையடித்துக் கொள்கிறேன்” என்றும் சவால் விடுத்துள்ளார்.பெகாசஸ் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் நாடகம் நடத்துவதாக பிரதமர் மோடி கூறியிருப்பதற்கும் பதிலளித்துள்ள டெரிக் ஓ பிரையன், “டெலிபிராம்டரை பார்த்து படிக்கும் ஒரு மன்னவன் இருக்கிறார். அவர்தான் பெரிய நாடகக்காரர். அவருக்கு இன்னும் ஆஸ்கர்தான் கிடைக்கவில்லை” என்றும் தாக்கியுள்ளார்.