india

img

ஒன்றிய அமைச்சரவை திடீர் விரிவாக்கம்.... 43 அமைச்சர்களில் அதிமுக, பாமக, தமாகாவிற்கு இடமில்லை....

புதுதில்லி:
கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சரிவரக் கையாள முடியாமை, 100 ரூபாயை தாண்டியுள்ள பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால்மக்கள் மத்தியில் எழுந்துள்ள கோபம், எண்ணற்ற பிரச்சனைகளால் விமர்சனத் திற்கு ஆளாகியுள்ள பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவை ஜூலை 7 அன்று புதிதாக மாற்றியமைக்கப்பட்டது. 43 அமைச்சர்களுடன் ஒன்றிய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

அமைச்சர் பதவி ‘உத்தரவாதத்துடன்’ வேறு கட்சிகளிலிருந்து பாஜகவிற்கு தாவியவர்களை திருப்திப்படுத்தவும் சில மாநிலங்களில் அடுத்துவரும் சட்டமன்றத் தேர்தலை கணக்கில்கொண்டும் அமைச்சரவை விரிவாக்கப்பட்டுள்ளது. இணையமைச்சர்கள் சிலர் கேபினட் அந்தஸ்துக்கு உயர்த்தப்பட்டுள்ளனர். தமிழ்நாடு பாஜகதலைவர் எல்.முருகன் ஒன்றிய அமைச்சராகியுள்ளார். அதேசமயத்தில் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்த அதிமுக,பாமக ,தமாகா ஆகிய கட்சிகளுக்கு அமைச்சரவை யில் இடமில்லை. இதனால் அக்கட்சியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

1. நாராயண ரானே

2. சர்பானந்தா சோனாவால்

3. டாக்டர் வீரேந்திர குமார்

4. ஜோதிராதித்யா எம்.சிந்தியா

5. ராமச்சந்திர பிரசாத் சிங்

6. அஷ்வினி வைஷ்ணவ்

7. பசுபதி குமார் பராஸ்

8. கிரண் ரிஜிஜு

9. ராஜ்குமார் சிங்

10. ஹர்தீப் சிங் பூரி

11. மன்சுக் மண்டவியா

12. பூபேந்தர் யாதவ்

13. பர்சோத்தம் ரூபாலா

14. ஜி.கிஷன் ரெட்டி

15. அனுராக் சிங் தாக்குர்

16. பங்கஜ் சௌத்ரி

17. அனுப்ரியா சிங் பட்டேல்

18. டாக்டர் சத்ய பால் சிங் பாகேல்

19. ராஜீவ் சந்திரசேகர்

20. ஷோபா கரண்ட்லாஜே

21. பானு பிரதாப் சிங் வர்மா

22. தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ்

23. மீனாட்சி லேகி

24. அன்னபூர்ணா தேவி

25. ஏ. நாராயணசாமி

26. கௌஷல் கிஷோர்

27. அஜய் பட்

28. பி.எல். வர்மா

29. அஜய் குமார்

30. சௌஹான் தேவுசிங்

31. பகவந்த் குபா

32. கபில் மோரேஷ்வர் பட்டீல்

33. பிரதிமா பௌமிக்

34. டாக்டர் சுபாஷ் சர்க்கார்

35. டாக்டர் பகவத் கிஷன்ராவ் கராத்

36. டாக்டர் ராஜ்குமார் ரஞ்சன் சிங்

37. டாக்டர் பாரதி பிரவின் பவார்

38. பிஷ்வேஷ்வர் துடு

39. சந்தானு தாக்குர்

40. டாக்டர் முஞ்சபரா மகேந்திரபாய்

41. ஜான் பார்லா

42. டாக்டர் எல்.முருகன்

43. நிசித் பிரமானிக்.

இந்த 43 அமைச்சர்களும் ஜூலை 7 அன்றுமாலையில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் பதவியேற்றுக்கொண்டனர். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.  குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, பிரதமர் மோடி மற்றும் அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.

12 அமைச்சர்கள் ராஜினாமா ஏற்பு

அமைச்சரவை விரிவாக்கத்திற்கு முன்னதாக, ஹர்ஷ வர்தன், ரவிசங்கர் பிரசாத், பிரகாஷ் ஜவடேகர், ரமேஷ் பொக்ரியால் உள்ளிட்ட ஒன்றிய அமைச்சர்கள்  12 பேர் ராஜினாமா செய்தனர். இவர்களின் ராஜினாமாவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்  ஏற்றுக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி  மாளிகை செய்தி வெளியிட்டுள்ளது.சட்டம் மற்றும் மின்னணுவியல் மற்றும் ஐ.டி. துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்,  சுற்றுச்சூழல் வன மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர்  பிரகாஷ்ஜவடேகர்,  தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்குவார்,  சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், ரசாயனத்துறை  அமைச்சர் சதானந்தகவுடா, சுற்றுச்சூழல்துறை இணையமைச்சர் பாபுல் சுப்ரியோ , குழந்தைகள்- பெண்கள் நலத்துறை அமைச்சர் தபாஸ்ரீ சவுத்ரி, இணையமைச்சர்கள்  சஞ்சய் தாத்ரே, ராவ் சாகேப் ரத்தன் லால் கடாரியா, ராவ் சாகேப் தான்வி படேல், பிரதாப் சந்திர சாரங்கி ஆகியோரும் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.  சமூக நீதி அமைச்சராக இருந்த தாவார்சந்த் கெலாட் கர்நாடக ளுநராகப் பொறுப்பேற்கிறார்.கொரோனா வைரஸ் தொற்றை சரியாகக் கையாளவில்லை என்ற காரணத்தால் டாக்டர் ஹர்ஷ் வர்தன் நீக்கப்பட்டார் என்று விமர்சனங்கள் வெளியாகியுள்ளன. நிஷாங்க் மற்றும் சந்தோஷ் கேங்வார் ஆகியோர் தாங்கள் உடல்நலமின்றி இருப்பதாகத் தங்களது ராஜினாமா கடிதத்தில் கூறியிருக்கிறார்கள்.தொழிலாளர்துறை அமைச்சகத்திலிருந்து வந்துள்ள செய்திகளின்படி கேங்வார், கொரோனா காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் வேலையின்மையை சரியாகக் கையாளவில்லை என்று தெரிவிக்கின்றன. (ந.நி.)

இந்த செய்தி தொகுப்பு 1 மற்றும் 4 என இரண்டு பிரிவாக தொகுக்கப்பட்டுள்ளது... தோழர்கள் தொடர்ந்து படிக்கும் வசதிக்காக இதே தொகுப்பில் ஒரே தொகுப்பாக கொடுக்கப்பட்டுள்ளது....