புதுதில்லி:
ஏழை, எளிய மாணவர்களை கல்விபெறுவதிலிருந்து விரட்டும் வகையில் மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விக்கொள்கைக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்துள்ளது.இந்நிலையில், இந்திய பல்கலைக்கழகங்கள் சங்கத்தின் 95 ஆவது ஆண்டுகூட்டத்தை முன்னிட்டு, புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்துவது குறித்து புதனன்று துணைவேந்தர் களின் தேசியக் கருத்தரங்கம் நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.
நாட்டின் உயர்கல்வி முன்னணிஅமைப்பான இந்திய பல்கலைக்கழ கங்கள் சங்கத்தின் 95 ஆவது ஆண்டு கூட்டம் இந்தாண்டு ஏப்ரல் 14-15 ஆகியதேதிகளில் நடைபெறுகிறது. இந்திய பல்கலைக்கழகங்கள் சங்கம், தனது கடந்த கால சாதனைகளை தெரிவிக்கவும், தனது நிதிநிலை அறிக்கையைதாக்கல் செய்யவும், வருங்காலத்துக் கான திட்ட நடவடிக்கைகளை வரையறுக்கும் நிகழ்வாகவும் இந்தக் கூட்டம்உள்ளது.இந்தியாவின் உயர் கல்வியை மாற்றும் தேசிய கல்விக் கொள்கை-2020-ஐ அமல்படுத்துவது குறித்து துணைவேந்தர்களின் தேசியக் கருத்தரங்கமும் இந்தக் கூட்டத்தில் நடத்தப்படுகிறது. இந்திய பல்கலைக்கழகங்கள் சங்கத்தின் 95 ஆவது ஆண்டு கூட்டம் மற்றும் துணைவேந்தர்களின் தேசியக் கருத்தரங்கில் பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 14 அன்று காலை 11 மணிக்கு காணொலி மூலம் உரையாற்றுகிறார்.கிஷோர் மக்வானா எழுதிய டாக்டர் பிஆர். அம்பேத்கர் தொடர்பான நான்கு புத்தகங்களையும் அவர் வெளியிடுகிறார். இந்நிகழ்ச்சியை அகமதாபாத்தில் உள்ள டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் திறந்தவெளி பல்கலைக்கழகம் நடத்துகிறது.