india

பாரதி பெயரில் காசி பல்கலையில் ''தமிழ் இருக்கை’’.... பிரதமர் மோடி அறிவிப்பு....

புதுதில்லி:
உலகின் மிகப் பழமையான மொழியான தமிழின் தாயகம் என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது என பிரதமர் மோடி கூறினார்.சர்தார்தாம் பவன் மற்றும் சர்தார்தாம் 2 ஆவது பெண்கள் விடுதி பூமி பூஜையை, பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை காணொலி காட்சிமூலம் தொடங்கி வைத்தார். அப்போது பிரதமர் மோடி கூறியதாவது:

‘‘உலகின் மிகப் பழமையான மொழியான தமிழின் தாயகம் என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. இன்று, சுப்பிரமணிய பாரதியின் 100ஆவது நினைவு நாளில் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக காசியின் பனாரஸ் இந்துபல்கலைக்கழகத்தில் தமிழுக்கான சுப்பிரமணியபாரதி அமர்வை நிறுவுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் பயன்பெறுவர்’’ எனக் கூறினார்.