india

img

பி.எம். கிசான் திட்டம்.... தகுதியில்லாத 20 லட்சம் பேருக்கு ரூ.1,364 கோடி வழங்கிய மத்திய அரசு..... ஆர்டிஐ-யில் அதிர்ச்சித் தகவல்....

புதுதில்லி:
பி.எம். கிசான் திட்டத்தின் கீழ் தகுதியில்லாத 20.48 லட்சம்  பயனாளிகளுக்கு மத்தியஅரசு ரூ.1,364 கோடி வழங்கியுள்ளது என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.சிறு, குறு விவசாயிகளுக்காக மத்திய அரசால் கொண்டுவரப்பட்டது பி.எம். கிசான் திட்டம். இந்தத் திட்டத்தின் கீழ் 2 ஹெக்டேருக்கும் குறைவாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகள், கூட்டாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்காக ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை 3 பிரிவுகளாக ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில்  இதுகுறித்து ஆர்டிஐ ஆர்வலரும், காமென்வெல்த் மனித உரிமை ஆர்வலருமான வெங்கடேஷ் நாயக் தகவல்அறியும் உரிமைச் சட்டம் மூலம் மத்திய வேளாண் துறையில் மனுத்தாக்கல்செய்தார்.அதில் கிடைத்த விவரங்கள் குறித்து வெங்கடேஷ் நாயக் கூறுகையில், இரு பிரிவுகளில் விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. தகுதியற்ற விவசாயிகள், வருமான வரி செலுத்தும் விவசாயிகள் இரு பிரிவினரும் நிதியுதவி பெற்றுள்ளது ஆர்டிஐ மனுவில் தெரியவந்துள்ளது.
தகுதியற்ற விவசாயிகளில் நிதியுதவி பெற்றதில் 55.58 சதவீதம் விவசாயிகள் வருமான வரி செலுத்துவோர். மீதமுள்ள 44.41சதவீதம் பேர் தகுதியற்ற பிரிவில் வரும்விவசாயிகள். கடந்த 2019-ம் ஆண்டிலி லிருந்து 1,364.13 கோடி ரூபாய், 2020, ஜூலை 31 ஆம் தேதிவரை தகுதியற்ற விவசாயிகளுக்கும், வருமான வரி செலுத்தும் விவசாயிகளுக்கும்தான் செலுத்தப்பட்டுள்ளது.அரசின் சார்பில் அளிக்கப்பட்ட புள்ளிவிவரங்களே, இந்த நிதியுதவி தவறானவர்கள் கைகளுக்குச் சென்றுள்ளதைக் காட்டுகிறது. இந்தப் பலன்களை அனுபவித்தவர்கள் பெரும்பாலும் பஞ்சாப், அசாம், மகாராஷ்டிரா, குஜராத், உத்தரப் பிரதேச மாநிலத்தைச்சேர்ந்தவர்கள்தான்.பஞ்சாப்பில் மட்டும் 23.16 சதவீதம் அதாவது 4.74 லட்சம் தகுதியற்ற விவசாயிகள் நிதியுதவிபெற்றுள்ளனர். அசாமில் 3.45 லட்சம்  விவசாயிகள், மகாராஷ்டிராவில் 2.86 லட்சம் பேர்பலன்களைப் பெற்றுள்ளனர். இந்த 3 மாநிலங்களில் உள்ள தகுதியற்ற விவசாயிகள் சேர்ந்து 54.03 சதவீதத் தொகையைப் பெற்றுள்ளனர்.குஜராத் மாநிலம் 4-வது இடத்தில் தகுதியற்ற 1.64 லட்சம் விவசாயிகள், அதைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசத்தில் 1.64 லட்சம் விவசாயிகள் நிதியுதவி பெற்றுள்ளனர்.ஒட்டுமொத்தமாக ரூ.1,364.13 கோடி  ரூ.2 ஆயிரம் வீதம் செலுத்தப்பட்டுள்ளது. இதில் 49.25 லட்சம் வருமான வரி செலுத்தும் விவசாயிகளுக்கு 18.95 லட்சம் தவணைகளில் செலுத்தப்பட்டுள்ளதுஇவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.