புதுதில்லி:
கொரோனா தொற்றுப் பரவலால் உலகமே முடங்கிப் போன போதும், இந்தியாவில் பெரும்பணக் காரர்களின் எண்ணிக்கை 2 மடங்குஅதிகரித்து இருப்பது தெரிய வந்துள்ளது.இதுதொடர்பாக நாடாளுமன்ற மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, நேரடி வரிகள் வாரியத் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு, ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்துள்ளார்.
அப்போது, கொரோனா தொற்றுப் பாதிப்பு, தொழில்கள் முடக்கம், வேலையிழப்புக்கு இடையேயும் 2019-20 மற்றும் 2020-21 ஆகிய நிதியாண்டுகளில் இந்தியாவில் பெரும்பணக்காரர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளதை குறிப்பிட்டுள்ளார்.“வருமான வரி கணக்குத் தாக்கல்களின் அடிப்படையில், இந்தியாவில் 2018-19 நிதியாண்டில் ரூ. 100 கோடி மற்றும் அதற்கும் மேல் வருவாய் ஈட்டியோர் எண்ணிக்கை 77 ஆக இருந்தது. ஆனால் கடந்த 2 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை இரு மடங்கு உயர்ந்துள்ளது.2019-20 நிதியாண்டில் மொத்த ஆண்டு வருமானம் ரூ. 100 கோடிக்குமேல் இருப்பதாக 141 போ், வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்துள்ளனர். 2020-21 நிதியாண்டிலும் ரூ. 100 கோடிக்கு மேல் ஆண்டு வருமானம் உள்ளதாக 136 போ் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்து ள்ளனா்” என்று தெரிவித்துள்ளனர்.
சுரேஷ் டெண்டுல்கா் குழு வகுத்தளித்த வழிமுறையின்படி வறுமை தொடா்பாக நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், 2011-12-இல் இந்தியாவில் 27 கோடி போ் (21.9 சதவிகிதம்) வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளனா். நாட்டில் வறுமையைப் போக்க மத்திய அரசு தொடா்ந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்திவருகிறது. பல்வேறு தொலை நோக்குத் திட்டங்களை வகுத்துள் ளது.2012-ஆம் ஆண்டில் இருந்ததை விட 2018-ஆம் ஆண்டில் குடிநீா், வடிகால் வசதி, பொதுசுகாதாரம், வசிக்கும் வீடுகளின் நிலை மேம்பட்டுள்ளது.நாட்டில் விலைவாசியில் ஸ்திரத் தன்மையை தொடா்வதற்காக ஒன்றிய அரசு உரிய கண்காணிப்புகளுடன் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அத்தியாவசிய உணவுப் பொருள்களின் தேவையை முன்கூட்டியே கணித்து, தேவைக்கு ஏற்ப இருப்பு வைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.சமையல் எண்ணெய் இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளது. பருப்பு, எண்ணெய் வித்துகளின் இறக்கு மதிக்கும் கட்டுப்பாடுகள் தளா்த்தப் பட்டுள்ளன என்றும் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.