புதுதில்லி:
இந்தியாவில், கொரோனாவின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. ஏப்.20 அன்று நாட்டு மக்கள் இடையே உரையாற்றிய பிரதமர்மோடி, ‘‘கொரோனாவை கட்டுப்படுத்துவதில், ஊரடங்கு கடைசி ஆயுதமாகவே இருக்க வேண்டும். மக்கள் கட்டுப்பாட்டுடன் நடந்துகொண்டால், ஊரடங்கு தேவையில்லை. நாட்டின்அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி போட, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மருந்துகள், ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்படாது. பொருளாதாரம் பாதிக்காத வகையில், வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தொடரும்’’ என தெரிவித்தார்.
இது தொடர்பாக, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் தனது டுவிட்டரில் பதிவிட்டு உள்ளதாவது: நான் வீட்டில் தனிமைபடுத்தி கொண்டு உள்ளேன். நாடு முழுவதும்இருந்து வரும் அதிர்ச்சிகரமான செய்திகளை பார்த்து வருகிறேன். கொரோனா தொற்றால் மட்டுமல்ல, மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளாலும் இந்தியா பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டிற்கு வெற்றுப் பேச்சுகளும், பயனில்லாத விழாக்களும் தேவையில்லை. இந்தியாவிற்கு, தீர்வு தான் உடனடி தேவை. இவ்வாறு அவர் பதிவிட்டு உள்ளார்.