india

img

காலபைரவரிலிருந்து ஏழுமலையான் தோற்றத்திற்கு மாறிய நித்தியானந்தா.... கடுப்பில் பெருமாள் பக்தர்கள்...

திருப்பதி:
பெங்களூரு அருகே பிடதி-யில் ஆசிரமம் ஒன்றை அமைத்து, அங்கு, பக்தி, ஆன்மீகம் என்ற பெயர்களில், பணக்காரப் பெண்களை ஏமாற்றிபணம்பறித்தல், விருப்பத்திற்கு மாறாக, அவர்களை அடைத்துவைத்து பாலியல் வல்லுற வுக்கு உள்ளாக்குதல் என பல்வேறு கிரிமினல் வழக்குகளில் சிக்கியவர் சாமியார் நித்தியானந்தா.ஒருகட்டத்தில் இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நிலையில், வெளிநாட்டிற்கு கம்பி நீட்டிய நித்தியானந்தா, தீவு ஒன்றை விலைக்கு வாங்கி- அதனை தனிநாடாக அறிவித்து, அங்கேயே செட்டில் ஆனார். தன்னை கடவுள் சிவனின் அவதாரம் என்று கூறிக்கொண்ட அவர், தனது நாட்டிற்கு ‘கைலாசா’ என்று பெயர்சூட்டி, நாணயங்களையும் அறிமுகப்படுத்தினார். அவ்வப்போது ஆன்மீக வீடியோக்கள்,புகைப்படங்க ளை வெளியிடு வதும் அவரது வாடிக்கை. இந்நிலையில்தான், இவ்வளவு காலமாக சிவபெருமா னின் காலபைரவர் வேடத்தில்புகைப்படங்களை வெளியிட்டுவந்த நித்தியானந்தா, தற்போதுதிருப்பதி ஏழுமலையான் தோற்றத்தில் காட்சி தந்து, சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.

திருப்பதி வெங்கடேசப் பெருமாளைப் போலவே, ஏராளமான நகைகளையும், தலைக் கீரிடத்தையும் அணிந்து கொண்டுபுகைப்படத்துக்கு போஸ் கொடுத்துள்ளார். கண்ணை மூடியபடியும், கண்ணைத் திறந்தபடியும் பலவிதமாக பக்தர்களுக்கு அருளாசிவழங்கியுள்ளார். இது தற்போது ஏழுமலையான் பக்தர்கள் மத்தியில் கடுப்பை ஏற்படுத்தியுள்ளது.