புதுதில்லி:
‘இந்தியா டுடே’ செய்தி நிறுவனம் ‘தேசத்தின் மனநிலை’ (மூட் ஆப் தி நேஷன்) என்ற பெயரிலான கருத்துக் கணிப்பை குறிப்பிட்ட மாதங்கள் இடைவெளியில் வெளியிடுவது வழக்கம். கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, விலைவாசி, பணவீக்கம், பிரதமர், மாநில முதல்வர்கள் உள்ளிட்ட ஆட்சியாளர்களின் செயல்பாடு ஆகியவை தொடர்பான மக்களின்எண்ணவோட்டத்தை அறியும் அம் சங்கள் சர்வே-யில் இடம்பெறும். பிரதமர் மோடிக்கு மக்களிடம் உள்ளசெல்வாக்கு குறித்தும் இந்த சர்வேதொடர்ந்து கணிப்புகளை வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில், ‘மூட் ஆப் திநேஷன்’ சர்வே-யின் புதிய கருத்துக்கணிப்பை ‘இந்தியா டுடே’ தற்போதுவெளியிட்டுள்ளது. அதில், பிரதமர்மோடியின் செல்வாக்கு முன்னெப் போதும் இல்லாத அளவிற்கு வெறும்24 சதவிகிதம் என்ற அளவிற்கு சரிந்திருப்பது தெரியவந்துள்ளது. கொரோனா தொற்றைக் கையாளுவதில் வெளிப்பட்ட மோடியின் திறமையின்மை, கடுமையாக உயர்ந்துவரும் விலைவாசி, அதிகரிக்கும் வேலையின்மை ஆகியவையே மோடியின் செல்வாக்கு சரிவுக்கு காரணம் என்பதும் ‘இந்தியா டுடே கணிப்பில்’ தெரியவந்துள்ளது.கடந்த 2020 ஆகஸ்ட் மாதம் பிரதமர் மோடியை 66 சதவிகிதம் மக்கள்ஆதரிப்பதாக ‘மூட் ஆப் தி நேஷன்’ சர்வே கூறியிருந்தது. இது, 2021 ஜனவரியில் 38 சதவிகிதமாக சரிந்த போதே, பாஜகவினருக்கு பெரும்அதிர்ச்சியாக இருந்தது. தற்போது 2021 ஆகஸ்டில் மோடியின் செல்வாக்கு மேலும் சரிந்து 24 சதவிகிதத்திற்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்தியாவின் அடுத்த பிரதமர் பதவிக்கு நரேந்திர மோடிதான் தகுதியானவர் என்று வெறும் 24 சதவிகி
தம் பேர் மட்டுமே கூறியுள்ளனர்.
கடந்த ஆண்டில் நடத்தப்பட்ட சர்வேயைக் காட்டிலும் இந்த முறை மோடியின் செல்வாக்கு 42 சதவிகிதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த 7 மாதத்தில் மட்டும் 14 சதவிகிதம் பேரின் ஆதரவை மோடி இழந்துள்ளார்.கடந்த ஜூலை 10 முதல் 22-ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்தில் சுமார் 14000 பேரிடம் இந்த ஆய்வுநடத்தப்பட்டது. பங்கேற்றவர்களில் 71 சதவிகிதம் பேர் கிராமப்புறங்களை சேர்ந்தவர்கள். 29 சதவிகிதம் பேர் நகர்ப்புறத்தைச் சேர்ந்தவர்கள். மொத்தம் 19 மாநிலங்களில் 115 நாடாளுமன்ற மற்றும் 230 சட்டமன்றத் தொகுதிகளில் கணிப்பு மேற்கொள்ளப்பட்டது.இந்நிலையில், கருத்துக் கணிப் பில் பங்கேற்ற பெரும்பாலானோர்,
கொரோனா பெருந்தொற்றை பிரதமர் கையாண்ட விதமே அவர்மீதான தங்களின் நம்பிக்கைக் குறைவுக்கு காரணம் என்று தெரிவித்துள்ளனர். ’கொரோனா முதல் அலையை மோடி கையாண்ட விதம் அருமைஎன 73 சதவிகிதம் பேர் அங்கீகரித்திருந்தாலும் இரண்டாம் அலை காலத்தில் அவர் சுதாரித்துக்கொள்ளவில்லை’ என்று குறிப்பிட்டுள்ளனர்.கொரோனா மரணங்கள் தொடர்பான அரசின் புள்ளிவிவரங் கள் மீது பெரும்பாலானோர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். அரசு குறிப்பிட்ட எண்ணிக்கையைக் காட்டிலும் அதிகமானோர் கொரோனாவுக்கு பலியாகி இருக்கலாம் என்ற கருத்தை 71 சதவிகிதம் பேர்தெரிவித்துள்ளனர். இந்த சுகாதாரப் பேரழிவுக்கு ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசு ஆகிய இருவருமே பொறுப்பு என்று 44 சதவிகிதம் பேர்கூறியுள்ளனர். தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் மிகப்பெரிய சறுக்கல் என்றால், அது விலைவாசி ஏற்றமும் பணவீக்கமும்தான் என 29 சதவிகிதம் பேர் குறிப்பிட்டுள்ளனர். வேலைவாய்ப்பின்மையே மோடி அரசின் மிகப்பெரிய பலவீனம் என்று23 சதவிகிதம் பேர் தெரிவித்தனர்.
மோடிக்கு அடுத்தபடியாக, பிரதமர் பதவிக்கு தகுதியானவர்கள் யார்? என்று எழுப்பப்பட்ட கேள் விக்கு உ.பி. பாஜக முதல்வர் ஆதித்யநாத் பெயரை அதிகம் பேர்கூறியதாகவும் ‘இந்தியா டுடே’ தெரிவித்துள்ளது. அவருக்கு 11 சதவிகிதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளதாக இந்தியா டுடே கூறியுள்ளது.இந்தப் பட்டியலில் 10 சதவிகிதம் பேரின் ஆதரவுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மூன்றாம் இடத்திலும், தலா 8 சதவிகிதம் பேர்ஆதரவுடன் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் நான்காவது இடத்திலும், 7 சதவிகிதம் பேர்களின் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஐந்தாவது இடத்திலும் வந்துள்ளனர். காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோருக்கு தலா 4 சதவிகிதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.இதில், ராகுல் காந்தியின் செல்வாக்கு கடந்த ஆண்டைக் காட்டிலும் 2 சதவிகிதமும், ஆதித்யநாத்தின் செல்வாக்கு 3 சதவிகிதமும் அதிகரித்துள்ளது. இதில் முக்கியமானது நாட்டின் ‘முதல் 11’ முதல்வர்கள் பட்டியலில் ஆதித்யநாத் ஓரங்கட் டப்பட்டிருக்கிறார். அவருக்கு 7-ஆவது இடமே கிடைத்துள்ளது.மேலும், நாட்டின் ‘முதல் 11’ சிறந்த முதல்வர்கள் பட்டியலில்,பாஜகவைச் சேர்ந்தவர்கள் 2 பேர் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். மீதமுள்ள 9 பேரும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.