india

img

கடன்களை திருப்பிச் செலுத்தியதாக மோடி அரசு பொய்... எண்ணெய் பத்திரங்கள் விவகாரத்தில் ஆர்டிஐ கேள்வி மூலம் அம்பலமான உண்மை....

புதுதில்லி:
காங்கிரஸ் ஆட்சியில் எண்ணெய்நிறுவனங்களுக்கு ரூ. 1 லட்சத்து 30 ஆயிரம் கோடி அளவிற்கு அளிக்கப்பட்ட கடன் உத்தரவாத பத்திரங்களே, இந்தியாவில் தற்போது பெட்ரோல் - டீசல் விலைகள் உயரக்காரணம் என்று ஒன்றிய நிதியமைச்சர்நிர்மலா சீதாராமன் அண்மையில் கூறியிருந்தார்.2004 முதல் 2014-ஆம் ஆண்டுவரையான காலத்தில், அன்றைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, எண்ணெய்நிறுவனங்களுக்கு ரூ. 1 லட்சத்து 30 ஆயிரம் கோடி அளவிற்கான உத்தரவாதப் பத்திரங்களைக் கொடுத்து கடன் வாங்கியுள்ளது. இந்த பத்திரங்கள் 2021, 2023, 2024, 2025, 2026 ஆகிய ஆண்டுகளில் முதிர்வடைவதால், அதற்கான கடன்தொகையை திருப்பித் தர வேண்டிய நிலை தங் கள் அரசுக்கு ஏற்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்திருந்தார்.

2015 - 16 நிதியாண்டு முதல் 2020-21நிதியாண்டு வரை கடன் நிலுவை தொகை ரூ. 1 லட்சத்து 30 ஆயிரத்து923 கோடியாக உள்ளது. இதற்குஒவ்வொரு ஆண்டும் 9 ஆயிரத்து 989 கோடியே 96 லட்சம் ரூபாய் வட்டியாக வழங்கப்பட்டு வருகிறது என்று2018-ஆம் ஆண்டு மாநிலங்களவையில் அறிக்கை அளிக்கப்பட்டிருந்த நிலையில், 2015-ஆம் ஆண்டு இரண்டு எண்ணெய் நிறுவனங்களுக்கு அசல் தொகையில் தலா ரூ.1750 கோடி கடன் திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளது, 2021 - 22 நிதியாண் டிலும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் தலா 5000 கோடி ரூபாய் விகிதம், மொத்தம் ரூ. 10ஆயிரம் கோடி கடனை திருப்பி அளிக்க வேண்டியுள்ளது என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சாகேத் கோகலேஎன்ற சமூக ஆர்வலர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அளித்திருந்த மனுக்கு ஒன்றிய அரசு தற்போதுபதிலளித்துள்ளது. அதில், கடந்த 2015-16 நிதியாண்டு முதல் எண்ணெய்நிறுவனங்களுக்கான கடன் தொகையில் ஒரு பைசாவைக் கூட மோடி அரசு திருப்பித் தரவில்லை என்ற உண்மை வெளியாகியுள்ளது. இதனை தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள சாகேத் கோகலே,எண்ணெய் உத்தரவாதப் பத்திரங்களுக்கான வட்டி மற்றும் கடன் தொகையை செலுத்துவதாலேயே பெட் ரோல் - டீசல் விலைகளை உயர்த்தவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என்ற மோடி அரசின் வாதம்- தனக்குகிடைத்த ஆர்டிஐ தரவுகள் மூலம்பொய் என்பது அம்பலமாகி இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், உலகளாவிய அளவில் எண்ணெய் விலைகள் குறைந்த போதிலும், மோடி அரசாங்கம் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு அதிக வரிவிதிப்பதன் மூலம் இந்தியர்களை ஏமாற்றி மிரட்டி வருகிறது என்பதுவும்இதன்மூலம் வெளிச்சத்திற்கு வந் துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள கோகலே, அப்படியானால் மக்களிடம் வசூலிக்கப்படும் பணம் முழுவதும் எங்கே போகிறது? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்த 2014-15 நிதியாண்டில் கலால் வரியாக மொத்தம்ரூ. 99 ஆயிரத்து 018 கோடி வசூலானநிலையில் 2019 - 20 நிதியாண்டில் அது ரூ. 2 லட்சத்து 23 ஆயிரத்து 057 கோடியாகவும் 2020 - 21 நிதியாண்டில் சுமார் ரூ. 3 லட்சத்து 35 ஆயிரம் கோடியாகவும் உயர்ந்தது. ஒட்டுமொத்தமாக பெட்ரோல் - டீசல் விலை உயர்வு மூலம் கடந்த 7 ஆண்டுகளில் மோடி அரசு சுமார்23 லட்சம் கோடி ரூபாயை மக்களிடமிருந்து சுரண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.