india

img

மண்ணெண்ணெய் மானியத்தை ஒழித்துக்கட்டிய மோடி அரசு.... சிறுகச் சிறுக விலையேற்றியே சந்தை விலைக்கு கொண்டுவந்து விட்டது....

புதுதில்லி:
ஏழைகளின் எரிபொருள் என்று கூறப்படும் மண்ணெண்ணெய்க்கு (Kerosene) வழங்கப்பட்டு வந்தமானியத்தை, கொஞ்சம் கொஞ்சமாக விலையை ஏற்றியே முழுவதுமாக மோடி அரசு ஒழித்துக் கட்டியுள்ளது.

தற்போது, பொது விநியோக முறையில் (public distribution system -PDS) ரேசனில் வழங்கப் படும் மண்ணெண்ணெய் விலையும்,வெளிச்சந்தையில் விற்கப்படும் மண்ணெண்ணெய் விலையும் ஒன் றாகியுள்ளது.அதுமட்டுமல்ல, நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2021-22 பட்ஜெட்டில் மண்ணெண்ணெய் மானியத்திற்கு ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கீடும் செய்யப்படவில்லை என்பதும்தெரியவந்துள்ளது.2019-20 நிதியாண்டில் மண் ணெண்ணெய்க்கான மொத்த மானியச் செலவு ரூ. 4 ஆயிரத்து 58 கோடியாக இருந்தது. அது நடப்பு 2020-21 நிதியாண்டில் ரூ. 2 ஆயிரத்து 677 கோடியே 32 லட்சமாக குறைக்கப்பட்டது. தற்போது நிதி ஒதுக்கீடே இல்லை என்று ஆகியிருக்கிறது.மண்ணெண்ணெய் மீதான மானியச் சுமையை, அதன் விலை மீதுஏற்றும்படி 2016ஆம் ஆண்டிலேயேஎரிபொருள் சில்லரை விற்பனையாளர்களுக்கு மோடி அரசு உத்தரவிட்டதாக அப்போது தொழில்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. ஒவ்வொரு 15 வாரங்களுக்கு ஒருமுறை மண்ணெண்ணெய் விலையை 25 காசுகள் விகிதம் உயர்த்தும்படி கூறியது. இதன்படி 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதமே, விலை உயர்வானது, மண்ணெண்ணெய் மானியத்தை இல்லாமல் ஆக்கிவிட்டது.

கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் மண்ணெண்ணெய் விலை லிட்டருக்கு 23 ரூபாய் 8 காசுகள் வரையில் உயர்த்தப்பட்டுள்ளது. 2016 இல், மும்பையில் ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் விலை 15 ரூபாய் 2 காசுகளாக இருந்தது. அதுஇப்போது 36 ரூபாய் 12 காசுகளாக உயர்ந்துள்ளது. குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே ரேசனில் மானிய விலையில் மண்ணெண்ணெய் விநியோகிக்கப்பட்டு வருகிறது. என்றாலும், தற்போது அதுவே சந்தை விலைக்குவந்துவிட்டதால் ரேசன் கடைகளில் மண்ணெண்ணெய் வாங்குவது வீண்என்ற நிலைமை வந்துள்ளது. 

மோடி அரசு எதிர்பார்த்தது இதைத் தான். நாமாக இல்லாமல் தானாகவே மானியத்தை இல்லாமல் செய்துவிட வேண்டும் என்று திட்டம் போட்டது. தற்போது அது நிறைவேறியுள்ளது.இதுதொடர்பாக விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், நாட்டில் 8 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்(எல்பிஜி) இணைப்புகள் வழங்கப் படுவதால், மண்ணெண்ணெய் நுகர்வு குறைந்துள்ளது என்று மத்திய அரசு வட்டாரங்கள் சமாளிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளன.ஆனால், இப்போதும் கடைக்கோடி கிராமங்களில் சமையலுக்காகவும், வீட்டில் விளக்கு எரிக்கும் நோக்கங்களுக்காகவும் இப்போதும் மண்ணெண்ணெய்தான் பயன்படுத் தப்பட்டு வருகிறது.

எண்ணெய் அமைச்சகத்தின் பெட்ரோலிய திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வு பிரிவின் (Petroleum Planning & Analysis Cell -PPAC)புள்ளிவிவரங்களும் “2020 ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான மாதங்களில் மண்ணெண்ணெய் நுகர்வு 28.4 சதவிகிதம் அதிகரித்துள்ளது” என்றே தெரிவிக்கின்றன.ஆந்திரா, தில்லி, ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்கள் மண் ணெண்ணெய் பயன்பாடு இல்லாத மாநிலங்களாக அறிவிக்கப்பட்டு உள்ளதாகவும், பாஜக ஆண்ட மற்றும் ஆளும் மாநிலங்களான மகாராஷ்டிரா, குஜராத், பீகார், உத்தரப்பிரதேசம் ஆகியவை ரேசன் மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை தானாகவே முன்வந்து வேண்டாம் என்று கூறிவிட்டதாகவும் பிபிஏசி தெரிவிக்கிறது.

                              *******************

சமையல் சிலிண்டருக்கான மானியமும் குறைப்பு!

நாடு முழுவதும் 28 கோடியே 90 லட் சம் சமையல் எரிவாயு இணைப்புகள் கொடுக்கப்பட்டிருப்பதாக தம்பட்டம் அடிக்கும் மோடி அரசு, மறுபுறத்தில், சமையல் சிலிண்டர்களுக்கான மானியத்தையும் பட்ஜெட்டில் வெட்டிக் குறைத்துள்ளது.2019-20இல் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ. 35 ஆயிரத்து 605 கோடி மானியமாக ஒதுக்கீடு செய்யப் பட்டு இருந்தது. இதனை முடிவடைய உள்ள 2020-21 நிதியாண்டிற்கு ரூ. 25 ஆயிரத்து 520 கோடியே 79 லட்சமாக குறைத்த பாஜக அரசு, எதிர்வரும் 2021-22 நிதியாண்டிற்கு வெறும் ரூ. 12 ஆயிரத்து 480 கோடியாக வெட்டிச் சுருக்கியுள்ளது.