புதுதில்லி:
இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசு ஆட்சியை பாதுகாத்திட வருமாறு இந்தியமக்களுக்கு 19 கட்சிகளின் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இன்று இந்தியாவை காப்பாற்றவாருங்கள் அதன் மூலம் நமது வருங்காலத்தை சிறப்பாக மாற்றியமைக்கலாம் என்றும் அவர்கள்கேட்டுக் கொண்டுள்ளனர்.
ஆகஸ்ட் 20 அன்று நடைபெற்ற இணையவழி கூட்டத்திற்குப் பிறகு பத்தொன்பது எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் இணைந்து பின்வரும் கூட்டறிக்கையை வெளியிட்டனர்.முறைகேடாக மக்களைக் கண்காணிப்பதற்காக பெகாசஸ் ராணுவ ஸ்பைவேரை உளவுமென்பொருளை சட்டவிரோதமாகப் பயன் படுத்தியது குறித்து விவாதிக்கவோ, பதிலளிக்கவோ மறுத்து ஒன்றிய அரசும், ஆளும் கட்சியும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரைச் சீர்குலைத்திருக்கும் விதத்தை நாங்கள்வன்மையாகக் கண்டிக்கின்றோம், விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்வது, கோவிட் -19 தொற்றுநோய் மேலாண்மையை முழுமையாகத் தவறாக நிர்வகித்தது, நாட்டையும் மக்களையும் பாதிக்கும்பணவீக்கம், விலைவாசி உயர்வு மற்றும் அதிகரிக்கும் வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற பல பிரச்சனைகள் ஆளும் அரசாங்கத்தால் வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டன.
எதிர்க்கட்சிகளின் போராட்டத்தைச் சீர் குலைக்கும் வகையில் பாதுகாவலர்களால் பெண் எம்.பி.க்கள் உட்பட எம்.பி.க்கள் பலரும்காயமடைந்த காட்சிகளை நாடாளுமன்றம் முன்னெப்போதுமில்லாத வகையில் இப்போது கண்டுள்ளது. நாடு மற்றும் மக்கள் தொடர்பான முக்கியமான பிரச்சனைகளை அவைகளில் எழுப்புவதற்கான எதிர்க்கட்சிகளின் உரிமையை மறுக்கும் வகையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் கையாண்ட விதத்தால் அரசாங்கம் ஏற்படுத்திய இடையூறுகளுக்கு இடையே சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.
வெற்று முழக்கங்களும் தவறான தகவல்களும்
மக்களின் துயரங்கள் குறித்த எந்தவொருபிரச்சனையிலும் தனது சுதந்திர தின உரையில் பிரதமர் கவனத்தைச் செலுத்தியிருக்கவில்லை. வாய்ச் சவடால் நிறைந்த அவரதுஉரையில் வெற்று முழக்கங்களும், தவறானதகவல்களுமே நிறைந்திருந்தன. உண்மையாகச் சொல்வதானால் அவரது உரை 2019 மற்றும் 2020ஆம் ஆண்டுகளில் அவர் வழங்கியிருந்த முந்தைய உரைகளின் மறுபதிப்பாகவே இருந்தது. நமது மக்களின் வாழ்க்கை மேலும் மேலும்அழிக்கப்படும் என்பதற்கான அபாயகரமான எச்சரிக்கையாகவே அவரது உரை அமைந்திருந் தது.கோவிட்-19 தொற்றுநோயைக் கையாள்வதில் இருந்த தவறான நிர்வாகம் ஏராளமான மக்கள் மீது, குறிப்பாக தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்கள் மீது கடுமையான வலியை ஏற்படுத்தியுள்ளது. நோய்த் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை, இறப்புகள் என்று இரண்டையும் மிகவும் குறைத்து அரசுஅறிக்கை வெளியிடும் நிகழ்வுகளை பல சர்வதேச மற்றும் தேசிய நிறுவனங்கள் சுட்டிக் காட்டியுள்ளன. அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டிருப்பதைக் காட்டிலும் உண்மையான புள்ளிவிவரங்கள் குறைந்தது ஐந்து மடங்கு அதிகம் இருக்கலாம் என்று அந்த நிறுவனங்கள் மதிப்பிட்டிருக் கின்றன.
தடுப்பூசி பற்றாக்குறை
பேரழிவை உருவாக்கக் கூடிய மூன்றாவது அலையைத் தடுப்பதற்கு, தடுப்பூசி போடப்படும் விகிதத்தை அதிவேகமாக அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளது. தற்போது தடுப்பூசிகளின் இரண்டு டோஸ்களையும் வயது வந்தோருக்கான மக்கள்தொகையில் வெறுமனே 11.3% மட்டுமே பெற்றுள்ளனர். நாற்பது சதவிகிதத்தினர் (இந்த 11.3% உட்பட) ஒரு டோஸ் மட்டுமேதடுப்பூசியைப் பெற்றுள்ளனர். தடுப்பூசி இந்தவிகிதத்தில் செலுத்தப்பட்டால் இந்த ஆண்டு இறுதிக்குள் வயதுவந்த மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவது என்ற இலக்கை அடைந்து விட முடியாது. தடுப்பூசி இயக்கம் மிகவும் மெதுவாக நடைபெறுவதற்கு தடுப்பூசி பற்றாக்குறையே முக்கியகாரணமாக உள்ளது. தடுப்பூசிகள் கிடைக்கும் அளவு குறித்து நாடாளுமன்றத்திடம் அரசாங்கம் ஒரே நாளில் மூன்று வெவ்வேறு புள்ளிவிவரங்களைத் தெரிவித்துள்ளது. இந்தியப் பொருளாதாரத்தின் அழிவு, மந்தநிலையை அதிகரித்து கோடிக்கணக்கான மக்களை வேலையின்மையை நோக்கித் தள்ளி மக்களின் வறுமையையும் பசியையும் அதிகரித்திருக்கிறது. அதிகரிக்கும் பணவீக்கம் மற்றும் விலை உயர்வால் மக்களின் துயரம் மேலும் அதிகரிக்கிறது. அவர்களுடைய வாழ்வாதாரம் சீரழிக்கப்படுகிறது.
விவசாயிக்கு ஆதரவு
நமது விவசாயிகளின் வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டம் ஒன்பதாவது மாதமாகத்தொடர்ந்து கொண்டிருக்கிறது, விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களைரத்து செய்ய முடியாது, விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்கான கட்டாயஉத்தரவாதம் அளிக்க முடியாது என்பதில் அரசுஉறுதியாக உள்ளது. கீழே கையொப்பமிட்டுள்ள நாங்கள் அனைவரும் சம்யுக்தா கிசான் மோர்ச்சாஎன்ற பெயரில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கான எங்கள் ஆதரவை மீண்டும்
இங்கே வலியுறுத்துகிறோம்.
ஜனநாயக, அரசியலமைப்பு நிறுவனங்கள் மீது தாக்குதல்
மக்களைக் கண்காணிப்பதற்காக பெகாசஸ்ராணுவ உளவு மென்பொருளை இந்திய அரசுவாங்கியிருப்பது மிகவும் ஆபத்தானது. இந்தியஅரசின் ஏதாவதொரு ஏஜென்சி சைபர் ராணுவ கண்காணிப்புக்குப் பெயர் பெற்ற இஸ்ரேலிய நிறுவனமான என்எஸ்ஓவிடமிருந்து பெகாசஸ் உளவு மென்பொருளை வாங்கியிருக்கிறதா என்ற நேரடியான கேள்விக்கு அரசாங்கம் பதிலளிக்க மறுக்கின்றது. இந்தக் கேள்விக்குப் பதில் அளித்து தன்னைக் குற்றமற்றது என்று அரசு நிறுவிக் கொள்ள வேண்டும். இதுபோன்ற கண்காணிப்பு தனியுரிமை குறித்த மக்களின் அடிப்படை உரிமையை முற்றிலுமாக மீறுவதாக இருப்பது மட்டுமல்லாது இந்திய ஜனநாயகம் மற்றும் ஜனநாயக நிறுவனங்கள் மீதானதாக்குதலாகவும் இருக்கிறது. இந்தக் கண்காணிப்பில் உள்ளவர்களின் பட்டியலில் அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதிஉள்ளிட்ட நீதித்துறை அதிகாரிகள், முன்னாள் பிரதமர், முன்னாள் சிபிஐ தலைவர், முன்னாள் தேர்தல் ஆணையர், மாநில முன்னாள் முதல்வர்கள் இருவர் என்று பலரும் இடம் பெற்றிருக்கின்றனர். இது மிகவும் அபத்தமான செயலாகும். 2019இல் நடைபெற்ற நாடாளுமன்றத்திற் கான பொதுத் தேர்தல்களை முன்னிட்டு இத்தகைய கண்காணிப்பு பரவலாக இருந்தது என் பதை உலகளாவிய ஊடகச் செய்திகள் சுட்டிக் காட்டுகின்றன. இந்த கண்காணிப்பு தனிநபர்கள் மீது மட்டுமல்லாது ஜனநாயகத்தில் முக்கிய கட்டுப்பாடு கொண்டதாக இருக்கின்ற, தங்களுடைய அரசியலமைப்பு பொறுப்புகளை நிறைவேற்றுகின்ற நிறுவனங்கள் மீதான தாக்குதலாகவும் இருக்கிறது.
பொருளாதாரத்தின் பேரழிவு
வங்கிகள் மற்றும் நிதி சேவைகள் உட்பட பொதுத் துறைகளில் நிகழ்த்தப்படும் பெரிய அளவிலான தனியார்மயமாக்கல் என்று நமது தேசிய சொத்துகளின் மீது நடத்தப்படுகின்ற பெருங்கொள்ளையுடன் பொருளாதாரத்தின் பேரழிவு இணைந்துள்ளது. நமது கனிம வளங்கள், பொது பயன்பாடுகளின் தனியார்மயமாக் கல் போன்றவை பிரதமரின் நண்பர்களுக்கு மட்டும் பயனளிக்கும் விதத்தில் இருக்கின்றன. இதனை கடுமையாக எதிர்க்க வேண்டியுள்ளது. தலித்துகள், பழங்குடியினர், பெண்கள் மீதான தாக்குதல்கள் பல மடங்கு அதிகரித் துள்ளன. அது நாட்டில் சமூக நீதியை நோக்கி நகரும் அரசியலமைப்பிற்கான அவசியத்தை முற்றிலுமாக மறுதலிக்கிறது.
தொடர்ச்சி 3-ஆம் பக்கம் பார்க்க...