புதுதில்லி:
ஜூன் 26 அன்று நாடு தழுவியஅளவில் விவசாயிகள் போராட்டத்திற்குஒருமைப்பாடு தெரிவித்து, “வேளாண்மையைப் பாதுகாப்போம்-ஜனநாயகத்தைப் பாதுகாப்போம் தினம்” அனுசரித்திட வேண்டுமென்று மத்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டுமேடை அறைகூவல் விடுத்துள்ளது.
இது தொடர்பாக சிஐடியு, ஏஐடியுசி,தொமுச உட்பட மத்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டுமேடை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:அனைத்து விவசாயிகள் சங்கங்களின் முன்னணி சார்பில் துவங்கப்பட்ட விவசாயிகள் போராட்டம் தொடங்கி, 2021 ஜூன் 14 அன்று 200 நாட்கள் ஆகிவிட்டன. ஒன்றிய அரசாங்கம் நிறைவேற்றியுள்ள மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்றும்,மின்சார திருத்தச்சட்டத்தைத் திரும்பப்பெற வேண்டும் என்றும், குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்ட அங்கீகாரம் அளித்திட வேண்டும் என்றும் வலியுறுத்தி இந்தபோராட்டத்தை நடத்தி வருகிறார்கள். தில்லியின் எல்லைகளில் உள்ள சாலைகளில் தொடர்ந்து கிளர்ச்சிப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த200 நாட்களில் கடும் குளிர், நாசகரமான புழுதிப்புயல், சுட்டெரிக்கும் வெயில், தற்போது விடாது பெய்துகொண்டிருக்கும் மழை என அனைத்து இயற்கை இடர்பாடுகளையும் எதிர்கொண்டும் இப்போராட்டத்தைத் தொடர்ந்துகொண்டிருக்கிறார்கள். இதுவரை 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் இன்னுயிரைப் பலிகொடுத்து, தியாகிகளாகி இருக்கிறார்கள். இத்துடன் முழுக்க முழுக்க கார்ப்பரேட் ஆதரவுஒன்றிய அரசாங்கம் இந்தச் சட்டங்களையும் இத்துடன் தொழிலாளர்
களுக்கு விரோதமான புதிய தொழிலாளர் (விரோதச்) சட்டங்களையும்அமல்படுத்திடத் துடித்துக்கொண்டிருக் கிறது.
போராட்டம் தொடங்கி வரும் ஜூன் 26 அன்று ஏழு மாதங்கள் நிறைவடைகிறது. இந்த விவசாயிகள் போராட்டத்துடன் எண்ணற்ற போராட்டங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. பாஜகஅரசாங்கம் எதேச்சதிகாரப் பாதையில்ஓர் அறிவிக்கப்படாத அவசர நிலையை அமல்படுத்திக் கொண்டிருக்கிறது. லட்சத்தீவு போன்ற சிறு தீவில் உள்ளவர்கள்கூட பாஜகவின் எதேச்சதிகார நடவடிக்கைகளுக்கு எதிராகக் கிளர்ந்தெழத் தொடங்கிவிட்டனர். இவை அனைத்தையும் கோவிட்-19 பெருந்தொற்றின் இரண்டாவது அலைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கிறோம்என்ற பெயரில் செய்துகொண்டிருக் கிறது.
வரும் ஜூன் 26, விவசாயிகள் சங்கத்தின் முதுபெரும் தலைவர் ஸ்வாமி சஹஜானந்தா சரஸ்வதி நினைவுதினம் ஆகும். அன்றைய தினம் நாடு முழுவதும் கிளர்ச்சிப் போராட்டங்களில் ஈடுபட வேண்டும் என்று மத்தியத்தொழிற்சங்கங்களின் கூட்டுமேடை அறைகூவல் விடுக்கிறது.இந்தக் கிளர்ச்சிப் போராட்டங்கள் அனைத்து மாநிலங்களிலும் மாவட்ட,வட்ட, வட்டார அளவில் நடைபெறு வதுடன் ஆளுநர் மாளிகைகளின் முன்பும் மேற்கொள்ளப்பட வேண்டும்.இப்போராட்டத்தில் அனைத்துப்பிரிவு மக்களையும் அணிதிரட்டிடவேண்டும் என்றும் உறுப்பினர்கள்அனைவரையும் கேட்டுக்கொள் கிறோம்.
கோரிக்கைகள்:
$ தொழிலாளர் (விரோத) சட்டங்களையும், மூன்று வேளாண் சட்டங்களையும், மின்சாரத் திருத்தச் சட்டமுன்வடிவையும் ரத்து செய்திடுக.
$ குறைந்தபட்ச ஆதார விலைக்குச் சட்ட அங்கீகாரம் அளித்திடுக.
$ குறிப்பிட்ட காலவரையறைக்குள் அனைவருக்கும் இலவசமாகத் தடுப்பூசி செலுத்திடுக.
$ தேவைப்படும் அனைவருக்கும் மாதத்திற்கு தலா நபர் ஒருவருக்கு 10 கிலோ உணவு தானியங்கள் இலவசமாக அளித்திடுக. வருமான வரி செலுத்தும் வரம்புக்குள் வராத குடும்பத்தினருக்கு மாதந்தோறும் 7500 ரூபாய் நிவாரணத் தொகை அளித்திடுக.
$ பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்க்கும் நடவடிக்கைகளைக் கைவிடுக.
$ அரசாங்கம் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் கோவிட்19 பெருந்தொற்றுக்கு எதிராக அல்லும்பகலும் அயராது பணியாற்றிக் கொண்டிருக்கும் அனைத்து ஊழியர்களையும் முன்களப் பணியாளர்களாக அறிவித்து, உரிய இழப்பீடுகளை அளித்திடுக.
$ ‘ஆஷா’, அங்கன்வாடி, துப்புரவுப் பணியாளர்கள் உட்பட அனைத்து முன்களப் பணியாளர்களுக்கும் 50 லட்சம் ரூபாய் இன்சூரன்ஸ் ஏற்படுத்திடுக. கோவிட்-19இல் இறந்தவர் களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்கிடுக.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.