இந்தியாவின் முதல் விண்வெளிச் சூழல் ஆய்வை லடாக்கில் இஸ்ரோ தொடங்கியுள்ளது.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்காக ககன்யான் திட்டத்தைச் செயல்படுத்தி வரும் இஸ்ரோ, அதற்கான ஒவ்வொரு சோதனையையும் செய்து வருகிறது.
இந்நிலையில் இஸ்ரோ தனது முதல் அனலாக் ஆய்வை லடாக் பகுதியில் உள்ள லே பகுதியில் மேற்கொண்டுள்ளது. பூமிக்கு அப்பாற்பட்ட பயணங்களில் எதிர்கால விண்வெளி வீரர்கள் சந்திக்கும் சவால்களை எதிர்கொள்ளும் வகையில், மற்ற கிரங்களின் சூழலில் சிறப்பு கலன்கள் அமைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
செவ்வாய் கோள் மற்றும் நிலவின் நிலப்பரப்புகளை நெருக்கமாக ஒத்திருக்கும் அதன் தனித்துவமான புவியியல் பண்புகளுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட லடாக்கில் இந்த அனலாக் ஆய்வுப் பணி நடைபெறுகிறது.