india

img

சிறுபான்மையினர் ஆணைய தலைவராக இக்பால் சிங் லால்புரா நியமனம்....

புதுதில்லி:
தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக எஸ். இக்பால் சிங் லால்புராவை, இந்திய அரசு முன்மொழிந்துள்ளது. அவர் பதவி ஏற்கும் நாளில் இருந்து மூன்று ஆண்டுகளுக்கு இந்த பதவியை வகிப்பார் என்றும் சிறுபான்மையினர் விவகாரங்கள் அமைச்சகம் வெளியிட்டுள்ள அரசிதழ்அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் காவல்துறையில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு பாரதிய ஜனதா கட்சியில் தீவிரமாக பணியாற்றி வருபவர் இக்பால் சிங் லால்புரா. இவர் அந்த கட்சியின் செய்தித்தொடர்பாளராகவும் இருக்கிறார்.1978ஆம் ஆண்டில் பஞ்சாபில் நிரங்காரி மோதல் நடந்தபோது அந்த சம்பவத்தை விசாரிக்கும் அதிகாரிகள் குழுவில் இடம்பெற்றிருந்தவர் இக்பால் சிங் லால்புரா.சீக்கிய சமயத் தலைவர் ஜர்னைல் சிங்கை 1981ஆம் ஆண்டில்கைது செய்த நடவடிக்கையிலும் அவர் முக்கிய பங்கு வகித்தார்.தேசிய ஆணையத்தின் தலைவர் பதவிக்கு தகுதிவாய்ந்த ஒருவரை நியமிக்குமாறு ஒன்றிய அரசுக்கு கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதி தில்லி உயர் நீதிமன்றம் வழக்கு ஒன்றை விசாரித்தபோது அறிவுரை வழங்கியிருந்தது. இந்த நிலையில், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இக்பால் சிங் லால்புராவை ஒன்றிய அரசு நியமித்திருக்கிறது.பஞ்சாப் மாநில சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது.