headlines

img

கேரள மசோதாக்களை ஆளுநர் உடனடியாக அங்கீகரிக்க வேண்டும்

கேரள மசோதாக்களை ஆளுநர் உடனடியாக அங்கீகரிக்க வேண்டும்

கேரள சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட ஆறு முக்கிய மசோதாக்களுக்கு ஆளுநர் ராஜேந்திர விஷ்வநாத் அர்லேகர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு வலுத்துள்ளது. உச்ச நீதிமன்றம் சமீபத்தில், ஆளுநர்கள் அரசியலமைப்பு சட்டக்கட்ட மைப்பிற்குள் செயல்பட வேண்டும் என்று அறி வுறுத்தியதைத் தொடர்ந்து, இந்த மசோதாக்கள் தடையின்றி நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை யும், ஆளுநருக்கு கட்டாயமும் எழுந்துள்ளது.

அரசியலமைப்பின் 200-வது பிரிவின் கீழ் ஆளுநர்களுக்கு உள்ள பங்கு மிகத் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் தமிழ்நாடு வழக்கில் தலையிட்டு, ஆளுநர்கள் மாநில சட்டமன்றங்களால் நிறைவேற்றப்படும் மசோதாக்களை பரிசீலிக்க ஒரு காலக்கெடுவை நிர்ணயித்துள்ளது. அவர்களுக்கு மூன்று தெரி வுகள் மட்டுமே உள்ளன: ஒப்புதல் அளித்தல், ஒப்புதல் மறுத்தல், அல்லது குடியரசுத் தலை வரின் பரிசீலனைக்காக மசோதாவை அனுப்பி வைத்தல். மாறாக, கிடப்பில் போட எந்த உரிமையும் இல்லை.

கேரள அரசு ஆளுநரிடம் சமர்ப்பித்துள்ள முக்கிய மசோதாக்களில் பின்வருவன அடங்கும்:

1. கேரளா மாநில தனியார் பல்கலைக்கழ கங்கள் (நிறுவுதல் மற்றும் ஒழுங்குமுறை) மசோதா, 2025; 2. பல்கலைக்கழக சட்டங்கள் (திருத்தம்) மசோதா, 2025; 3. கேரளா மாநில முதியோர் ஆணையம் மசோதா, 2025; 4. பல்கலைக்கழக சட்டங்கள் (திருத்தம்) (எண் 2) மசோதா, 2025; 5. கேரளா விளையாட்டு (திருத்தம்) மசோதா, 2024; 6. கேரளா தொழில் உள்கட்டமைப்பு மேம்பாடு (திருத்தம்) மசோதா, 2024.

இந்த மசோதாக்கள் கல்வி, முதியோர் நலன், விளையாட்டு மற்றும் தொழில் உள்கட்டமைப்பு போன்ற முக்கிய துறைகளில் கேரளாவின் வளர்ச்சிக்கு அவசியமானவை.

கேரளாவைப் போலவே, கர்நாடகாவிலும் ஆளுநர் தாவர்சந்த் கெலாட் அலுவலகத்தில் ஆறு மசோதாக்களுக்கு ஒப்புதல் காத்தி ருக்கின்றன. ஏழு மசோதாக்கள் தெளிவுபடுத் தல்களுக்காக திருப்பி அனுப்பப்பட்டுள்ளன, மேலும் நான்கு மசோதாக்கள் குடியரசுத் தலை வரின் ஒப்புதலுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கர்நாடக அமைச்சரவை உச்ச நீதிமன்றத்தை அணுகி தீர்வு காண நடவடிக்கை எடுக்க உள்ளது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்ட மன்றங்களின் முடிவுகளை மதிக்கும் வகையில் ஆளுநர்கள் செயல்பட வேண்டும். கேரளா மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களில் முக்கிய மசோதாக்கள் ஆளுநர்களின் ஒப்புதலுக்காக காத்திருப்பது மக்களாட்சியின் செயல்பாட்டை பாதிக்கிறது. உச்ச நீதிமன்றம் நிர்ணயித்த காலக் கெடுவிற்குள் ஆளுநர்கள் தங்கள் கடமைகளை நிறைவேற்றுவது அவசியம்.