india

img

நாட்டின் பொருளாதாரத்தை குலைக்க ‘இன்போசிஸ்’ சதி... கார்ப்பரேட் நிறுவனம் மீது ஆர்எஸ்எஸ் பத்திரிகை திடீர் பாய்ச்சல்....

புதுதில்லி:
நக்சல் மற்றும் இடதுசாரி இயக் கங்களுடன் கைகோர்த்துக்கொண்டு இந்தியப் பொருளாதாரத்தைச் சீர்குலைக்க சதி செய்வதாக, புகழ்பெற்றசாப்ட்வேர் நிறுவனமான ‘இன்போசிஸ்’ (Infosys) மீது ஆர்எஸ்எஸ் சார்புபத்திரிகையான ‘பாஞ்சஜன்யா’ பாய்ந் துள்ளது.

வருமான வரி கணக்கு ரிட்டர்ன்களை பெறுவதற்கான காலஅவகாசத்தை 63 நாட்களிலிருந்து சுருக்கி ஒரேநாளில் ரிட்டர்ன்கள் கிடைக்கச் செய்யும் வகையில் சுலபமான ஐடி போர்டல்(IT Portal) ஒன்றை உருவாக்க மோடிஅரசு திட்டமிட்டது. இதற்கான பணியை, 2019-ஆம் ஆண்டு, பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் புகழ்பெற்ற சாப்ட்வேர் நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்திடம் ஒப்படைத்தது. அதனடிப்படையில், இன்போசிஸ் உருவாக்கிய http://www.incometax.gov.in என்ற புதிய ஐடி போர்ட்டலை கடந்த ஜூன்7-ஆம் தேதி நாட்டுக்கும் மோடி அரசு அறிமுகம் செய்தது. ஆனால் இந்த போர்ட்டலில் பல்வேறு கோளாறுகள் ஏற்பட்டதால் வரி செலுத்துவோரால் அதனை சரிவர பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
இதுதொடர்பாக இன்போசிஸ் தலைமை நிர்வாக அதிகாரி சலீல் பரேக்கை சம்மன் அனுப்பி நேரில் வரவழைத்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், போர்ட்டலில் உள்ள குறைபாடுகளை செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் சரிசெய்தாக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.இந்நிலையில் ஆர்எஸ்எஸ் சார்பு வாரப் பத்திரிகையான பாஞ்சஜன்யா (Panchajanya) கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இன்போசிஸ் தயாரித்து வழங்கிய ஐடி போர்ட்டல் பிரச்சனைகளைக் குறிப்பிட்டு,“இவை மீண்டும் மீண்டும் நிகழும்போது, அது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இன்போசிஸ் நிர்வாகம் வேண்டுமென்றே இந்தியாவின் பொருளாதாரத்தைச் சீர்குலைக்க முயல்வதாக தெரிகிறது. வெளிநாட்டு வாடிக்கையாளர்கள் சில தேச விரோத சக்திகள்இன்போசிஸ் மூலம் இந்தியாவின்பொருளாதார நலன்களுக்குத் தீங்குவிளைவிக்க முயல்கிறார்களா? வெளிநாட்டு வாடிக்கையாளர்களுக்கு இன்போசிஸ் இதே போன்ற மோசமான சேவையை வழங்குமா?” என்றுகேள்விகளை எழுப்பியுள்ளது.

“நக்சல்கள், இடதுசாரிகள் அமைப்புகளுக்கு உதவி செய்ததாக இன்போசிஸ் மீது ஏற்கனவே குற்றம்சாட்டப்பட்டுள்ளது. நாட்டில் பிளவுபடுத்தும் சக்திகளை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இன்போசிஸ் ஆதரிப்பது ஏற்கனவே வெளிப் படையாகத் தெரியவந்துள்ளது. தவறான தகவல்களைப் பரப்பும் இணையதளங்களுக்கும் இன்போசிஸ் நிதி அளிப்பதாகக் கூறப்படுகிறது. சாதிய வெறுப்புகளைப் பரப்பும் சில அமைப்புகளுக்கும் இன்போசிஸ் நிதி அளிக்கிறது. இன்போசிஸ் நிறுவனம் தேச விரோத அமைப்புகளுக்கு ஏன்நிதி அளிக்கிறது என்பதை விளக்கவேண்டும்” என்று அதில் குறிப்பிடப் பட்டு உள்ளது.

இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஆர்எஸ்எஸ் ஆதரவு பத்திரிகையின் குற்றச்சாட்டுக்களுக்கு இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள்சிஎப்ஓ மோகன்தாஸ் பய் பதிலளித் துள்ளார்.“இ-போர்டலில் சிக்கல் உள்ளதால்இன்போசிஸ் விமர்சனங்களுக்கு உரியதுதான். அதனாலேயே தவறுகளைக் களைய இன்போசிஸ் வேலைசெய்துவருகிறது. ஆனால், அதற்காக இன்போசிஸ் நிறுவனத்தை தேசவிரோத நிறுவனம் என்று விமர்சிப்பதும் சதித்திட்டங்களுடன் தொடர்புப் படுத்திப் பேசுவதும் மோசமான மனநிலையின் பிரதிபலிப்பு. அரசியலில்இப்படியான குற்றச்சாட்டுகள் சகஜம்தான். ஏனெனில் அரசியல்வாதிகள் ஒருவொருக்கொருவர் விமர் சித்துக் கொள்வது இயல்பே. ஆனால், அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றும் நிறுவனங்களை இவ்வாறான குற்றச்சாட் டுக்கு உள்ளாக்குவது சரியானது அல்ல!” என்று குறிப்பிட்டுள்ளார்.