2021-22 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் பல திட்டங் களை அறிவித்திருக்கிறீர்கள். இவற்றில் மக்களுக்கு எதிரான திட்டங்கள்தான் அதிகம். இத்திட்டங்கள் அனைத்துமே பெரு முதலாளிகளுக்கு சாதகமான திட்டங்களாகவே அமைந்திருக்கின்றன.மதுரையில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனைக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். ஆனால் மருத்துவமனைக்குத் தேவையான ஆரம்பக் கட்ட நடவடிக்கைகள் எதுவும் துவங்கப்படவில்லை. பிரதமர் அடிக்கல் நாட்டியதோடு சரி. அங்கே திட்டப்பணிகளை உடனே துவங்க வேண்டும்.
நெசவுத் தொழிலை நசுக்கும் பட்ஜெட்
தமிழகத்தில் திருப்பூர் நகரம் ஜவுளி உற்பத்தி மற்றும் பல ஏற்றுமதி மையங்களும் பல்வேறு கைத்தறி நெசவாளர்களும் உடைய நகரமாகும். பட்ஜெட்டில் அவர்கள் நலன் சார்ந்து எதுவும் கூறப்படவில்லை. அவர்களை முழுமையாக பட்ஜெட் புறக்கணித்துள்ளது. தமிழகத்தில், பெருமைக்குரிய விதத்தில், அந்நியச்செலாவணியை ஈட்டித்தந்த நெசவுத் தொழிலை நசுக்கும் விதமாக இந்த பட்ஜெட் அமைந்துள்ளது.எல்ஐசி இன்று நாட்டிலுள்ள பலலட்சம் மக்களின் நம்பிக்கை. நீங்கள்விற்பது என்பது எல்ஐசி நிறுவனத் தின் கோடிக்கணக்கான வியாபாரத்தையோ அல்லது அந்நிறுவனத் தின் பல லட்சம் கோடி மதிப்புள்ள அசையா சொத்துக்களையோ மட்டும் அல்ல. நீங்கள் விற்பது இந்நாட்டு மக்களின் நம்பிக்கையை ஆகும். எனவே எல்ஐசி-யை விற்கும்முடிவைக் கைவிட வேண்டும்.தலித்/பழங்குடி போன்ற பட்டியல்இன மாணவர்களுக்கு உயர்கல்விக்கு, கல்வி உதவித்தொகையை உயர்த்துவதாகக் கூறி, ஆறு ஆண்டுகளுக்கு 35 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கியிருப்பதாகக் கூறியிருக்கிறீர்கள். ஆனால், உண்மையில் தமிழகத்தில் பல ஆண்டுகளாக பள்ளி, கல்லூரிகளில் படிக்கும்தலித்/பழங்குடியின மாணவர் களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படவே இல்லை.
அசாமிலும் மேற்கு வங்கத்திலும் தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனுக்காக ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருக்கிறீர்கள். தமிழகத்தில் வால்பாறை, நீலகிரிமாவட்டங்களில் உள்ள தேயிலைத்தோட்டங்களில் பல்லாயிரக்கணக்கில் பெண்கள் பணியாற்றி வருகிறார்கள். அவர்களை ஏன் புறக்கணிக்கிறீர்கள்?
கடனுக்கு வட்டி கட்டுவது யார்?
ஜிஎஸ்டி-யில் மாநில அரசுகளின்பங்குகளை இதுவரை தராமல்,அவைகள் கடன் வாங்கிக் கொள்ளலாம் என்று கூறியிருக்கிறீர்கள். இதுஜிஎஸ்டி சட்டத்திற்கு எதிரானது. அவ்வாறு கடன் வாங்கிவிட்டால் அதற்கான வட்டியை யார் கட்டுவது? எனவே தமிழக அரசுக்குத் தரவேண்டிய பங்கினை உடனே அளித் திடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.ஏறத்தாழ ஐம்பதாண்டுகளுக் கும் மேலாக தமிழகத்தில் அனைவருக்குமான பொது விநியோக முறை நடைபெற்று வருகிறது. கேரளமாநிலமும் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது. மற்ற மாநிலங்களில் எல்லாம் வறுமைக்கோட் டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மட்டும்தான் பொது விநியோக முறையின் மூலம் உணவுப் பொருள்களை வாங்கிக்கொள்ள முடியும்.இப்போது மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்கள் அமலானால், இவ்வாறான அனைவருக்குமான பொது விநியோக முறைக்கு மூடுவிழா நடத்தப்பட்டுவிடும். எனவே வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தினார்.
பட்ஜெட் மீதான விவாதத்தில் மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் அந்தியூர் செல்வராசின் தன் கன்னிப் பேச்சு...