டேராடூன்:
ஹரித்துவார் கும்பமேளா நடைபெற்ற மார்ச் 31 முதல் ஏப்ரல் 24 வரையிலான காலத்தில் மட்டும் உத்தரகண்ட் மாநிலத்தில் கொரோனாபரவல் ஆயிரத்து எண்ணூறு சதவிகிதம் (1800%) அதிகரித்துள்ளது.ஏப்ரல் 12-ஆம் தேதி கும்பமேளாவில் 35 லட்சம் பேரும், ஏப்ரல் 14-ஆம்தேதி 13 லட்சத்து 52 ஆயிரம் பேரும்ஹரித்துவாரில் குவிந்தனர். இப்படிஅதிகப்படியான மக்கள் ஒரே இடத் தில் குவிந்ததால், கும்பமேளா நடந்த-கடந்த ஒரு மாதத்தில் மட்டும் உத்தரகண்ட் மாநிலத்தில் புதிதாக 1.3 லட்சம் பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டு உள்ளது.
கும்பமேளாவுக்கு முன்பு வரை,உத்தரகண்ட்டில் மொத்தமாகவே 3 ஆயிரம் பேர்தான் உயிரிழந்திருந்தனர். ஆனால், கும்பமேளாவுக்கு பிந்தைய 1 மாதத்திற்குள் மட்டும் 1,713 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். தற்போது உத்தரகண்ட் மாநிலத்தில் கொரோனா பாசிடிவ் விகிதமும் அதிர்ச்சியளிக்கும் வகையில் 24 சதவிகிதம் அளவிற்கு உயர்ந்துள்ளது. அதாவது பரிசோதனை செய்யப்படும் நால்வரில் ஒருவருக்கு அங்கு கொரோனா உறுதி செய்யப்படுகிறது. அதேபோல கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளின் எண்ணிக்கை கும்பமேளா தொடங்குவதற்கு முன் 1,863 ஆகஇருந்தது, ஏப்ரல் 24 அன்று இது33 ஆயிரத்து 330 ஆக உயர்ந்துள் ளது. இது உத்தரகண்ட் மாநில மக்களை தற்போது அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.கும்பமேளாவுக்கு அனுமதி அளிப்பது கொரோனா தொற்று பரவலுக்கு வழி வகுக்காதா? என்று உத்தரகண்ட் பாஜக முதல்வர் தீரத்சிங் ராவத்திடம் ஒருமுறை கேள்விஎழுப்பப்பட்டது. அப்போது, ‘ஹரித்துவார் நகரில் கங்காதேவி ஆறாக ஓடுகிறார். கொரோனாவில் இருந்து அவர் எங்களை காப்பாற்றுவார்’ என்று தீரத் சிங் ராவத் அலட்சியமாக கூறியது இங்கு குறிப்பிடத் தக்கது.