புதுதில்லி:
ஜூலை இறுதி அல்லது ஆகஸ்ட் மாதத்தில் 12 முதல் 18 வயது உள்ளசிறுவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிதொடங்கும் என மத்திய அரசு கூறியுள்ளது.தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி தொடர்பான வழக்கில், மத்திய அரசு தாக்கல் செய்த மனுவில், ஜைடஸ் காடிலா நிறுவனம் தயாரித்த தடுப்பூசிக்கு அனுமதி கிடைத்த பின்னர் விரைவில் சிறுவர்களுக்கு செலுத்தப்படும் என தெரிவித்திருந்தது. ஜைடஸ் காடிலாநிறுவனம், தனது தடுப்பூசிக்கு அனுமதி கேட்டு, விரைவில் விண்ணப்பம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தடுப்பூசி பெரியவர்கள் மற் றும் குழந்தைகளுக்கும் கொடுக்க முடியும் என அந்த நிறுவனம் தெரிவித்து உள்ளது.
இது தொடர்பாக தடுப்பூசிக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுத் தலைவர் டாக்டர் என் கே அரோராகூறுகையில், ஜைடஸ் கடிலா தடுப்பூசிபரிசோதனை முடிவடையும் நிலையில் உள்ளது. ஜூலை அல்லது ஆகஸ்ட் மாத துவக்கத்தில் 12 வயதுமுதல் 18 வயதுள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கும். இந்தத் தடுப்பூசிக்கு அனுமதி கிடைக்கும் போது, நமக்கு கூடுதலாக ஒரு தடுப்பூசி கிடைக்கும் என்றார்.முன்னதாக எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப்குலேரியா கூறுகையில், “இந்தத் தடுப்பூசி, பயன்பாட்டிற்கு வரும் போது மிகப்பெரிய சாதனையாக அமையும். பள்ளிகள் மற்றும் வெளிப்புற நடவடிக்கைகளை துவக்குவதற்கு பெரிய வாய்ப்பாக அமையும். 2 வயது முதல் 18 வயதுள்ள குழந்தைகளுக்கு கோவாக்சின்தடுப்பூசி குறித்த இரண்டாவது மற்றும்மூன்றாவது கட்ட பரிசோதனை முடிவுகள் செப்டம்பர் மாதம் கிடைக்கும். மருந்துத் தர கட்டுப்பாட்டு அமைப்பின்ஒப்புதல் பெற்ற பின்னர், அந்தத் தடுப்பூசி குழந்தைகளுக்கு செலுத்தப்படும். பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்தாலும், அதுவும் குழந்தைகளுக்கான மற்றொரு தடுப்பூசியாக இருக்கும்” என்றார். இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையில், இந்த ஆண்டு டிசம்பர் 31- ஆம் தேதிக்குள் கொரோனா தடுப்பூசி இந்தியாவின் முழுத் தகுதியுள்ளோர் அனைவருக்கும் செலுத்துவதற்கான முயற்சிகள் நடந்து வருவதாகவும் மத்தியஅரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள் ளது. ஒன்றிய அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில், ஆகஸ்ட் 2021 முதல் டிசம்பர்2021 வரை மொத்தம் 135 கோடி தடுப்பூசிகள் இந்தியாவில் கிடைக்கும்என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இது உறுதியானால் 135 கோடியில், 50 கோடி கோவிஷீல்டாகவும், 40 கோடிகோவாக்சினாகவும் இருக்கும். ரஷ்ய தயாரிப்பான ஸ்புட்னிக் வி தடுப்பூசி 10 கோடி, 30 கோடி பயோ- இ- சப்- யூனிட் (Bio E Sub unit) தடுப்பூசி, 5 கோடி ஜைடஸ் காடிலா டி.என்.ஏ தடுப்பூசி கிடைக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளது மேலும் சில மாநிலங்கள், சிறியதனியார் மருத்துவமனைகள் தடுப்பூசிகளைப் பெறுவதில் சிரமம் இருப்பதாக புகார் அளித்தன. இதையடுத்து தடுப்பூசி கொள்முதல் கொள்கை மாற்றப்பட்டதாக மத்திய அரசு நீதிமன் றத்தில் ஒப்புக் கொண்டுள்ளது.