புதுதில்லி:
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 4,002 ரயில் பெட்டிகள் தயார் நிலையில் வைக்கப் பட்டுள்ளதாக இந்திய ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக 4,002 ரயில் பெட்டிகள் தயார் நிலையில் உள்ளதாக இந்திய ரயில்வே துறை தெரிவித்துள்ளதுஇதுகுறித்து இந்திய ரயில்வே கூறுகையில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக இதுவரை 4002 பெட்டிகளை கொரோனா சிகிச்சை வார்டுகளாக மாற்றப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. 16 மண்டலங்களில் இந்த பெட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் மாநில அரசுகளின் கோரிக்கைக்கு ஏற்ப பெட்டிகள் வழங்கப்படும். இந்த ரயில் பெட்டிகளால் சந்தேகப்படும் கொரோனா நோயாளிகள் மற்றும் உறுதி செய்யப்பட்ட நோயாளிகளைத் தனிமைப்படுத்தி வைக்கும் வசதிகள் அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளது.