புதுதில்லி:
முதல் தவணை கொரோனா தடுப்பூசி96.6 சதவீதம் அளவுக்கு உயிரிழப்பை தடுப்பதாக ஒன்றிய நிதி ஆயோக் அமைப்பின் சுகாதார உறுப்பினர் வி.கே.பால் கூறியுள்ளார்.இதுதொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது: கொரோனாவுக்கு எதிரான மிகப்பெரியஆயுதம் தடுப்பூசி. அனைவரும் தடுப்பூசிசெலுத்தி கொள்ள வேண்டும். கொரோனா2 ஆவது அலையின் போது அதிக உயிரிழப்புகள் நேரிட்டன. பெரும்பாலும் தடுப்பூசிபோடாதவர்களே உயிரிழந்தனர்.முதல் தவணை கொரோனா தடுப்பூசி96.6 சதவீதம் அளவுக்கும் இரு தவணைதடுப்பூசி 97.5 சதவீதம் அளவுக்கும் உயிரிழப்பை தடுக்கிறது. இது ஆய்வுகளின்மூலம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டாலும் உயிரிழப்பு ஏற்படும் ஆபத்து கிடையாது. மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டிய அவசியமும் இருக்காது.உத்தரப்பிரதேசத்தில் டெங்கு காய்ச்சலால் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். எனவே டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்கள்குறித்தும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பள்ளி மாணவ,மாணவியருக்குதடுப்பூசிபோட்ட பிறகே பள்ளிகளை திறக்கவேண்டும் என்ற வாதத்தை ஏற்க முடியாது. எனினும்ஆசிரியர்கள், பள்ளி ஊழியர்கள், பெற்றோர்தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும்.நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டோரில் 58 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர். 18 சதவீதம் பேர்2 தவணை தடுப்பூசியையும் போட்டுள்ளனர்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.