புதுதில்லி:
வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி தில்லி எல்லையில் 144-வது நாளாக செவ்வாயன்று விவசாயிகள் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
கார்ப்பரேட் கம்பெனிகள் ஆதாயம் பெறும் வகையிலும் விவசாயிகளை வஞ்சிக்கும் வகையிலும் மத்திய மோடி அரசு வேளாண் சட்டங்களை கொண்டுவந்துள்ளது. இச்சட்டங்களை ரத்து செய்யக்கோரி தில்லி மாநில எல்லைகளில் பல்வேறு மாநில விவசாயிகள் 144 நாட்களை கடந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.ஆனால் பிரதமர் மோடியோ,விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை ஏற்க மறுத்து,கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு விசுவாசம் காட்டி வருகிறார் என்று விவசாயிகளும் அரசியல் கட்சித் தலைவர்களும் சாடியுள்ளனர். இப்போராட்டத்தில் பல விவசாயிகள் இறந்துள்ளனர்.
இந்நிலையில் தில்லி எல்லையில் விவசாயிகளின் போராட்டம் ஏப்ரல் 20 செவ்வாய்க்கிழமையன்று 144-வது நாளை எட்டியது. தில்லி எல்லைகளான சிங்கு, திக்ரி, காசியாபாத் ஆகிய பகுதிகளில் கூடாரங்கள் அமைத்து விவசாயிகள் போராடி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என்று விவசாய அமைப்புகள் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளன.