புதுதில்லி:
நாட்டு மக்கள் அனைவருக்கும் இலவசமாகத் தடுப்பூசி செலுத்தப்பட வேண்டும், மூன்றாவது அலையை எதிர்கொள்ளுமாறு அவர்களை கைவிட்டுவிடக்கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழுக் கூட்டம் ஜூன் 3 அன்று நடைபெற்றது. அதன்பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கை வருமாறு:
கோவிட் தடுப்பூசி
கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் இரண்டாவது அலை மட்டுப்பட்டிருக்கிறது என்று, நிர்வா கத்தரப்பினரால் கூறப்பட்டிருக்கிறது. ஆனாலும், தொற்றால் பாதிப்புக்கு உள்ளாகிறவர்களின் எண்ணிக்கையில் கணிசமான வீழ்ச்சி எதுவும் இல்லை. இது மிகவும் ஆபத்தானதும் கவலைக்குரியதுமாகும்.நம் மக்களின் உயிர்களைப் பாதுகாத்திட ஒரே வழி, அனைத்து மக்களுக்கும் இலவசமாகத் தடுப்பூசிகளை செலுத்தி பெருந்தொற்றைக் கட்டுப்படுத்திட நடவடிக்கை எடுப்பதேயாகும். இந்த ஆண்டின் இறுதிக்குள் வயது வந்த அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டுமானால் 190 கோடி தடுப்பூசி தவணைகள் (doses) போடப்பட வேண்டும். மோடி அரசாங்கம், 2021 ஆகஸ்ட்-டிசம்பருக்குள் 216 கோடி தடுப்பூசி தவணைகள் போடப்படும் என்று மே 13 அன்று கூறியிருந்தது. ஆனால் உச்சநீதிமன்றத்தில் ஜூன் 26 அன்று தாக்கல் செய்துள்ள உறுதிவாக்குமூலத்தில் 135 கோடி தடுப்பூசி தவணைகள் என்று தடுப்பூசியின் அளவைக் கணிசமாகக் குறைத்துக் கூறியிருக்கிறது. எனவே அனைத்து மக்களுக்கும் இதனால் தடுப்பூசி களைச் செலுத்த முடியாமல் போகும். இது ஓர் ஆபத்தான அளவிற்குப் பற்றாக்குறையை ஏற்படுத்திடும்.
மோடி அரசாங்கம், உலக அளவில் எங்கிருந்தெல்லாம் தடுப்பூசிகளைப் பெறமுடியுமோ அங்கிருந்தெல்லாம் உடனடியாகத் தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்திட வேண்டும். அதன்மூலம் தடுப்பூசிச் செலுத்தும் திட்டத்தை விரைவுபடுத்திட வேண்டும். இந்தியாவும் நம் மக்களும் மூன்றாவது அலையை எதிர்கொள்வதற்காக விட்டுவிட முடியாது. அதற்குமுன் அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு, அவர்களை நோய்த்தொற்றிலிருந்து தடுத்திட வேண்டியது அவசியமாகும்.
விண்ணை எட்டியுள்ள விலைவாசி
பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை நாள்தோறும் உயர்த்திக் கொண்டிருப்பதன் காரணமாக மக்களின் வாழ்வாதாரங்கள் முடக்கப்பட்டிருப்பது மட்டுமல்லாமல், பணவீக்கமும் மிகவும் வேகமாக அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அனைத்து உணவுப் பொருள்களின் விலைகளும் உயர்ந்திருக்கிறது. சமையல்எண்ணெய்களின் விலைகள் விண்ணை நோக்கி ராக்கெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கின்றன. மானிய விலையில் அளிக்கப்பட்டு வந்த சமையல் எரிவாயு சிலிண்டர்கட்டணம், கடந்த ஏழு மாதங்களில்சுமார் 250 ரூபாய் உயர்த்தப் பட்டிருக்கிறது.
மோடி அரசாங்கம் பெட்ரோல் மீதான கலால் வரிகளை 258 சதவீதமும், டீசல் மீது 820 சதவீதமும் உயர்த்தி இருக்கிறது. ஒன்றிய அரசாங்கம் இவ்வாறு மக்களின் வயிற்றில் அடித்து வருவாயைப் பெருக்கிக் கொண்டிருக்கிறது. கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் காரணமாக ஏற்கனவே நொந்துநூலாகிப் போயிருக்கிற சாமானிய மக்களின்மீது இவ்வாறு மேலும் சுமைகள் ஏற்றப்பட்டிருக்கின்றன.பெட்ரோலியப் பொருட்கள் மீதான கலால் வரிகள் ரத்து செய்யப்பட வேண்டும் என்றும், அனைத்து அத்தியாவசியப் பொருள்களின் விலைகளையும் கட்டுக்குள் கொண்டுவர வலுவான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கோருகிறது.மோடி அரசாங்கம், வருமானவரி வரம்புக்குள் வராத அனைத்துக் குடும்பத்தினருக்கும் மாதந்தோறும் 7,500 ரூபாய் நேரடி ரொக்க மாற்றுஉடனடியாக அளித்திட வேண்டும், தினசரி நுகர்வுக்கான அத்தியாவசிய உணவுப் பொருள்கள் அனைத்தும் அடங்கிய உணவுத் தொகுப்புகள் (food kits), இலவசமாக விநியோகிக்கப்பட வேண்டும்.
அத்தியாவசியப் பாதுகாப்பு சேவைகள் அவசரச் சட்டத்தைத் திரும்பப் பெறுக!
2021 அத்தியாவசியப் பாதுகாப்பு சேவைகள் அவசரச் சட்டத்தை (Essential Defence Services Ordinance,2021) அரசியல் தலைமைக்குழு கடுமையாகக் கண்டனம் செய்கிறது. இது ராணுவ ஆயுதங்கள் உற்பத்தித் தொழிற்சாலைகளில் (Ordnance Factories) பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்கள் நாட்டின் சொத்துக்களை கார்ப்பரேட் கூட்டுக்களவாணிகள் கொள்ளை லாபம் ஈட்டுவதற்கு வசதி செய்து கொடுக்கும் நோக்கில் அடிமாட்டு விலைக்கு விற்பதற்கு எதிராக நியாயமான முறையில் கிளர்ச்சிப் போராட்டங்கள் நடத்திடுவதற்குத் தடை விதிப்பதைக் குறிக்கோளாகக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் தற்போது இயங்கிவரும் 41 ராணுவ தளவாடத் தொழிற்சாலைகள் ஏழு கழகங்களாக (corporations) மாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன. மோடி அரசாங்கம் இவ்வளவு மிகவும் கேந்திரமான துறையில் நான்கு பொதுத்துறை நிறுவனங்கள் மட்டுமே இருந்திடும் என்று அறிவித்திருக்கிறது. இதை ஏற்க முடியாது. நாட்டின் சொத்துக் கள் சூறையாடப்படுவதற்கு எதிராககிளர்ச்சிப் போராட்டங்கள் தீவிர மாகும்.இந்த அவசரச்சட்டம் உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு வலியுறுத்து கிறது.(ந.நி.)