புதுதில்லி:
மிகவும் கிரிமினல்தனமாக அமெரிக்கா, கியூபா மீது ஏற்படுத்தியுள்ள பொருளாதாரத் தடையை விலக்கிக்கொள்ள வேண்டும் என்று மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரியும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் து.ராஜாவும் கோரியுள் ளனர். இது தொடர்பாக இவர்கள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது:
அமெரிக்க பொருளாதார முற்றுகை ஏற்படுத்தியுள்ள பிரச்சனைகளை முன்வைத்து கியூபாவில் ஒருபகுதி மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். கியூப அரசாங்கமும், கியூப கம்யூனிஸ்ட் கட்சியும் அதனைக் கையாண்டுகொண்டிருக்கிறது.
உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதா?
இவ்வாறு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டிருப்பவர்களுக்குப் பின்னணியில் அமெரிக்கா இருக்கிறது. அமெரிக்கா, தான் கியூபா மீதுவிதித்துள்ள பொருளாதாரத் தடையும், கோவிட்-19 கொரோனா வைரஸ் பெருந்தொற்றும் அங்கேஏற்படுத்தியுள்ள பொருளாதாரப் பிரச்சனைகளைத் தங்களுக்குசாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளஇந்த ஆர்ப்பாட்டக்காரர்களைப் பயன்படுத்தி, அமெரிக்கா முயற்சித்துக் கொண்டிருக்கிறது. இவர்களின்மூலம் சோசலிஸ்ட் கியூபாவை பலவீனப்படுத்த அவர்கள் குறியாக இருக்கிறார்கள். கியூபாவின் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்க ஏகாதிபத்தியம் தலையிட்டிருப்பதற்குக் கண்டனம் தெரிவித்துக்கொள்கிறோம்.
கியூபாவில் ஏற்பட்டிருக்கும் பொருளாதாரப் பிரச்சனைகள், அமெரிக்காவினால் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கிரிமினல்தனமாக கியூபா மீது திணித் துள்ள மனிதாபிமானமற்ற பொருளாதாரத் தடையின் விளைவுகளேயாகும். ஹெல்ம்ஸ்-பர்டன் சட்டத்தின் டைட்டில் 3 (TitleIII of Helms-Burton Act) இந்தப்பொருளாதாரத் தடையை மேலும்வலுப்படுத்தி, முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு கியூப மக்களுக்குசிரமங்களைக் கொண்டு வந்திருக்கிறது. மேலும் அமெரிக்கா, கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில், கியூபாவை பயங்கரவாதத்திற்கு உதவிடும்நாடு என அநியாயமாக முத்திரை குத்தி, தன்னுடைய பொருளாதாரத்தடைகளை மேலும் வலுப்படுத்தியிருக்கிறது. கியூபா மீது டிரம்ப் நிர்வாகம் ஏற்படுத்தியிருந்த கூடுதலான 243 தடைகள் இப்போதும் தொடர் கின்றன.
பொய்ச் செய்திகளை பரப்பி தூண்டி விடும் அமெரிக்கா
இவற்றின் விளைவாக, கியூபாஉணவுப் பொருள்களையோ, மருந்துகள் உற்பத்தி மற்றும் உயிர்காக்கும்மருத்துவ உபகரணங்களுக்குத் தேவையான மூலப் பொருள்களையோ இறக்குமதி செய்யமுடியவில்லை. இவை கியூபா மக்களின் சிரமங்களை அதிகப்படுத்தி இருக்கின்றன. அமெரிக்கா தன்னுடையசமூக ஊடகங்களின் மேடைகளைப் பயன்படுத்தி, பொய்ச் செய்திகளைப்பரப்பி, கியூபா அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் மேற்கொண்டிடகியூபா மக்களைத் தூண்டிக்கொண் டிருக்கிறது. இவ்வளவுக்குப் பிறகும், கியூபாஅரசாங்கம் தன்னுடைய சொந்ததடுப்பூசிகளைக் கண்டுபிடித்து, கொரோனா பெருந்தொற்றைஎதிர்த்து முறியடித்திடுவதில் உலகத்திற்கு உதவிக் கொண்டிருக்கிறது, தன்நாட்டின் மீது ஏவப்பட்டுள்ளஅனைத்துப் பொருளாதாரத் தடைகளையும் எதிர்த்து, முறியடித்து வெற்றிகொள்ளவும் முயற்சித்துக் கொண்டிருக்கிறது.
ஒருமைப்பாடு
மிகவும் இக்கட்டான சிரமங்களுடன் கியூபா இப்போதிருக்கும் நிலையில், கியூபா அரசாங்கத்திற் கும், கியூபா மக்களுக்கும் எங்கள் ஒருமைப்பாட்டைத் தெரிவித்துக் கொள்கிறோம். கியூபா மக்களும் அவர்களுடைய அரசாங்கமும் தங்கள் தாய்நாட்டின் இறையாண்மையையும், சோசலிசத்தையும் பாதுகாப்பதற்காக நடத்திக் கொண்டிருக்கும் போராட்டத்தில் அவர்களுடன் நிற்க வேண்டும் என்று நம் மக்களுக்கு அறைகூவல் விடுக்கிறோம். இவ்வாறு சீத்தாராம் யெச்சூரியும், து.ராஜாவும் அறிக்கையில் தெரிவித்துள்ளார்கள். (ந.நி.)