india

img

டாக்டர். வி. சிவதாசன், ஜான் பிரிட்டாஸ் மாநிலங்களவை உறுப்பினர்களாக பதவியேற்பு...

புதுதில்லி:
கேரளத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட டாக்டர் வி.சிவதாசன் மற்றும் ஜான் பிரிட்டாஸ் ஆகியோர் மாநிலங்களவை எம்.பி.க்களாக பதவியேற்றனர். மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு அறையில் செவ்வாயன்று (ஜுன் 8) பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் வி.சிவதாசன் போராட்டக்களங்களை உலுக்கிய அனுபவங்களின் பின்புலத்துடன் மாநிலங்களவைக்கு வருகிறார். பாலா அரசு மேல்நிலைப் பள்ளியின் எஸ்எப்ஐ கிளை செயலாளராக மாணவர் அரசியலில் தீவிரமாக செயல்பட்ட சிவதாசன், அமைப்பின் அகில இந்தியத் தலைவரானார். நாட்டின் மூன்று மாநிலங்களில் சிறையில் அடைக்கப்பட்ட மாணவர் தலைவர் சிவதாசன்.கேரளத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினரான முதலாவது காட்சி ஊடக ஆளுமை ஜான் பிரிட்டாஸ். முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இடதுசாரி ஊடகத்தின் முகமாக செயல்பட்டவர் ஜான் பிரிட்டாஸ். இவர் தனது 22 வயதில் தேசாபிமானி நிருபராக தில்லிக்கு வந்து முதல் செய்தி அளித்தது மாநிலங்களவையில் இருந்தாகும். சுகாதாரபிரச்சனைகள் காரணமாக அப்துல் வஹாப் (யுடிப்) செவ்வாயன்று எம்.பி.யாக பதவியேற்கவில்லை.