இந்தியாவில் முதலில் காணப்பட்ட டெல்டா கொரோனா உருமாறி, வைரஸ் பரவலில் இன்னும் முன்னேறி இருக்கிறது. தற்போது டெல்டா ப்ளஸ் என்ற அதன் உருமாறியும் இந்தியாவில் பரவி வருகிறது. நாட்டில் இதுவரை 48 பேருக்கு டெல்டா பிளஸ் உருமாறிய தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தின் இயக்குநர் மருத்துவர் எஸ்.கே. சிங் தெரிவித்துள்ளதாக ஏஎன்ஐ முகமை செய்தி வெளியிட்டுள்ளது.இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 20 பேருக்கும், தமிழகத்தில் 9 பேருக்கும் டெல்டா பிளஸ் திரிபு கொண்ட தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.