புதுதில்லி:
இந்தியாவில் கொரோனா பாதிப்புதரவுகளைத் தொகுத்து வழங்கி வந்த ‘கோவிட்19இண்டியா.ஓஆர்ஜி’ (covid19india.org) இணையதளம் அக்டோபர் 31 முதல் மூடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கொரோனா பாதிப்பு தொடர்பான தரவுகளை அணுகுவதற்கான ஒரு சிறப்பான இணையதளமாக ’கோவிட்19இந்தியா.ஓஆர்ஜி’ இணையதளம் செயல்பட்டு வருகிறது. இந்த தளம்எதையும் புதிதாக உருவாக்குவ தில்லை. ஆனால், பல்வேறு அரசு அமைப்புகள் அளிக்கும் அதிகாரப் பூர்வ தரவுகளை எல்லாம் திரட்டித் தொகுத்து வழங்கும் பணியைச் செய்து வந்தது. அரசு அமைப்புகள் இடையிலான ஒருங்கிணைப்பில் நிலவும் நடைமுறைச் சிக்கல்களுக்கு இந்த இணையதளம் ஒரு தீர்வாக இருந்து வந்தது. இதனால், நாட்டின் அதிகாரப்பூர்வ தளமாகவே மாறி யது.
இந்தியாவில் கொரோனா மொத்த பாதிப்புகள் எத்தனை, இன்னும்சிகிச்சையில் இருப்பவர் எண்ணிக்கை, குணமானவர்கள் எண்ணிக்கை, உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை ஆகிய விவரங்களை அன்றாடம் உள்ளீடு செய்து வந்தது. தற்போது தடுப்பூசி விவரங்களையும் பதிவேற்றி வந்தது.செய்தி நோக்கில் தகவல்களைத் தேடும் பத்திரிகையாளர்கள் முதல், கொரோனா போக்கை அலசும் ஆய்வாளர்கள், எச்சரிக்கை அளிக்க விரும்பும் சுகாதார வல்லுநர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் தற்போதுவரை இந்தத் தளத்தைத்தான் தரவுகளுக்கான முக்கிய ஆதாரமாக பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ’கோவிட்19 இந்தியா.ஆர்க்’ (https://www.covid19india.org/) இணைய தளம் 2021 அக்டோபர் 31 முதல்செயல்படாது என அறிவிக்கப் பட்டுள்ளது. இதன் காரணமாக, 2021 அக்டோபருக்குப் பின், கொரோனா தொடர்பான தரவுகளை ஒரே இடத்தில் அணுகுவது சாத்தியம் இல்லாமல் போகும் நிலைஏற்பட்டுள்ளது.கொரோனா பாதிப்புச் சூழலில் இத்தகைய ஒரு தரவு ஒருங்கிணைப்பு தளம் தேவை என்பதை உணர்ந்து, 300-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் ஒன்றிணைந்து இந்த தளத்தை ஏற்படுத்தினர். பிரதிபலனை எதிர்பார்க்காமலேயே பணியாற்றியும் வந்தனர். தங்களை யார் என்றுகூட இவர்கள் அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை.இந்நிலையில், தன்னார்வலர்கள் தங்களின் முழு நேரத்தையும் இனியும் இந்த முயற்சிக்கு அளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர். தங்களின் சொந்த வாழ்க்கை, படிப்பு, வாழ்வாதார நெருக்கடி காரணமாக வழக்கமான அலுவல்களுக்குத் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.
“இந்தியாவில் ஏற்கெனவே தரவு இல்லாத சூழலில், ’கோவிட்19 இந்தியா.ஆர்க்’ (https://www.covid19india.org/) இணையதளம் அக்டோபர் 31 முதல் நிறுத்தப்படுவது மிகப்பெரிய இழப்பு” என்று மிச்சிகன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் பிரமர் முகர்ஜி உள்ளிட்டோர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர். உன்னதமான தன்னார்வ முயற்சியை அரசுஅதிகாரிகள் ஆதரித்திருக்க வேண்டும் என்றும் அவர்கள் குறிப் பிட்டுள்ளனர்.