india

img

மும்பையில் துப்புரவுப் பணியாளர்கள் 580 பேர் பணிநிரந்தரம்... 22 ஆண்டுகால நீதிமன்ற போராட்டம் வெற்றி...

புதுதில்லி:
கிரேட்டர் மும்பை முனிசிபல் கவுன்சிலில் பணியாற்றி வந்த 580 துப்புரவுப் பணியாளர்கள் 22 ஆண்டுகால நீதிமன்றப் போராட்டத்திற்குப் பின் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர்.  இவர்களின் வழக்குகளை விசாரித்த தொழில்துறை நீதிமன்றம் இவர்களை பணி நிரந்தரம் செய்தும், இவர்களுக்குக் கடந்த 22 ஆண்டுகளுக்குமான ஊதிய நிலுவைத் தொகைகளை அளித்திட வேண்டும் என்றும் தீர்ப்பளித்துள்ளது.

தாதாராவ் படேகர் உட்பட 580 பேர் கடந்த 22 ஆண்டுகளாக இவ்வாறு பணிபுரிந்து வந்தனர். 1996இல் ஒப்பந்த அடிப்படையில் வேலையில் சேர்ந்த இவர்களை மாநகராட்சி நிரந்தரம் செய்திடாமலேயே காலத்தைத் தள்ளிப்போட்டு வந்தது. இப்போது தொழில்துறை  நீதிமன்றம் இவர்களைப் பணிநிரந்தரம் செய்து, இவர்களின் நிலுவைத் தொகைகளை அளித்திட வேண்டும் என்றும் தீர்ப்பளித்திருக்கிறது. நீதிமன்றத்தில் போராடிவந்த 580 பேரில் 22 பேர் இறந்துவிட்டனர். (ந.நி.)