புதுதில்லி:
பாஜக தலைவரான கபில் மிஸ்ரா, பல்வேறு சமூகத்தினர் மத்தியில் பகைமையைப் பரப்பி வருவதாலும், அவருடைய நடவடிக்கை கள் தேச விரோதமானவையாக இருப்பதாலும் உடனடியாக அவரைக் கைது செய்து, சட்ட ரீதியாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தில்லிகாவல்துறை ஆணையருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் மற்றும் தில்லி மாநிலச் செயலாளர் கே.எம். திவாரிஆகியோர் கடிதங்கள் எழுதி யுள்ளனர்.
அவர்கள் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
2021 பிப்ரவரி 15 ஆம் தேதியிட்ட நியூஸ் லாண்டரி என்னும் செய்தி ஊடகத்தில் வந்துள்ள செய்தி குறித்து தங்கள் கவனத்திற்குக் கொண்டுவருகிறோம். டெலிகிராம் என்னும் சமூக ஊடக மேடையில் “இந்து ஈகோ சிஸ்டம்” (“Hindu Eco System”) என்பதன் கீழ் பெரியஅளவிலான ஒரு குழு இயங்கிவருகிறது. அது மக்கள் மத்தியில் வகுப்புவாத துவேஷத்தைஉற்பத்தி செய்து கொண்டிருக்கிறது. இதன் உரிமையாளர், இதனை உருவாக்குபவர் பாஜகதலைவர் கபில் மிஸ்ரா என்பது இதனைப் பார்க்கும்போது உங்களுக்குத் தெரிய வரும். இதில் 20 ஆயிரம் உறுப்பினர்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதில் வரும் செய்திகளைப் பார்க்கும்போது, பல மட்டங்களில் பிரதானமாக சிறுபான்மையினரைக் குறிவைத்துசெய்திகள் பரப்பப்பட்டு வருவதைப் பார்க்க முடிகிறது. மேலும்விவசாயிகளின் போராட்டங்களை அவதூறு செய்ய வேண்டுமென்று கோரியும் ஏராளமான செய்திகள்இவற்றில் இடம் பெற்றிருப்ப தையும், அதேபோன்று விவசாயிகள் போராட்டத்துடன் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடியவர்களை இணைக்கும் முயற்சியும் இவர்கள் அனைவரையும் “இந்து எதிரிகள்” என்று அழைத்திருப்பதையும் காண முடிகிறது.
கபில் மிஸ்ரா உருவாக்கி யிருக்கின்ற செய்திகளில் நாட்டின்குடிமக்களில் ஒரு பிரிவினருக்கு எதிராக மதத்தின் பேரால் பகைமைஉணர்வை ஏற்படுத்தி வெறுப்பையும் ஆத்திரமூட்டும் உணர்வுகளை யும் ஏற்படுத்தக்கூடிய விதத்தில் அமைந்திருக்கின்றன. இந்த நபர், ஆர்எஸ்எஸ் இயக்கத்தோடு நெருங்கிய தொடர்பு கொண்டவர். ஆர்எஸ்எஸ் இயக்கத்தை அவர் மேம்படுத்தி வருவதில் இதனைப் பார்க்க முடியும்.
உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டுவரும் தில்லி காவல்துறை, விவசாயிகள் போராட்டங்களுக்கு ஆதரவாக அனுப்பப்படும் பதிவுகளுக்கு எதிராக மட்டுமே சுறுசுறுப்பாக இயங்கிடப் பணிக்கப்பட்டிருக்கிறது. உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் கிரேடா தம்பர்க் (Greta Thumberg) என்கிற பதின்பருவத்தைச் சேர்ந்தவர், விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக அனுப்பிய டிவிட்டர் செய்திக்கு எதிராக அவர்கள் தேசத் துரோகக்குற்றப்பிரிவின் கீழும், (குழுக் களுக்கு மத்தியில் பகைமையை உருவாக்கும் குற்றத்தைச் செய்ததாக) இந்தியத் தண்டனைச் சட்டம் 153-ஏ ஆகிய பிரிவின் கீழும், நீங்கள் முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்திருக்கிறீர்கள்.
குடிமை- ஜனநாயக உரிமைகளை அவமதிக்கும் செயல்
இதேபோல் நீங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பெங்களூரைச் சேர்ந்த திஷா ரவி என்கிற 21 வயதுடைய சுற்றுச்சூழல்செயற்பாட்டாளர் மீதும் நட வடிக்கை எடுத்து உங்கள் போலீஸ் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது. போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு அளித்திடும் இளைஞர்களை மிரட்டிப் பணியவைக்கும் விதத்தில் மேற்கொள்ளப்படும் இத்தகைய கொடூரமான மற்றும் கண்டிக்கத்தக்க நடவடிக்கைகள் அரசமைப்புச்சட்டம் குடிமக்களுக்கு அளித் திருக்கும் குடிமை உரிமைகள் மற்றும் ஜனநாயக உரிமைகளை அவமதித்திடும் செயல்களாகும். இவர் அனுப்பிய செய்தியில் எவ்விதமான தேசத்துரோக அம்சமும் கிடையாது. மக்களிடையே பகைமையை உருவாக்கும்குற்றச்சாட்டுக்கு முற்றிலும் முர ணானதாகும். இது மக்களிடையே ஒற்றுமையை கோருகிறது.
எனவேதான் நாங்கள், உங்களிடம் இவ்வாறு பல்வேறுபட்ட மக்கள் பிரிவினரிடையே பகைமையைப் பரப்பிவரும் கபில் மிஸ்ரா கைது செய்யப்பட வேண்டும் என்றுகோருகிறோம். அவருடைய நடவடிக்கைகள் தேச விரோதமான வைகளாகும். (ந.நி.)