புதுதில்லி;
‘பாரத் நெட்’ திட்டத்தில் நடந்துள்ளசுமார் ரூ. 500 கோடி மதிப்பிலான ஊழலை சிஏஜி அம்பலத்திற்கு கொண்டுவந்துள்ள நிலையில், அதுபற்றி பிரதமர் மோடி விளக்கம் அளிக்கவேண்டும் என்று காங்கிரஸ் மூத்தத் தலைவர்களில் ஒருவரான பவன் கெராவலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவில் உள்ள 6 லட்சம் கிராமங்கள் பயன்பெறும் வகையில் 2.5 லட்சம் கிராம பஞ்சாயத்துகளை பிராட்பேண்ட் இண்டர்நெட் மூலம் இணைப்பதற்காக கொண்டுவரப்பட்டதுதான் ‘பாரத் நெட்’ திட்டம் ஆகும்.இந்த திட்டத்தில்தான் கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக மத்திய கணக்குத் தணிக்கை அதிகாரியின் (CAG) அறிக்கையை குறிப்பிட்டு, காங்கிரஸ் செய்தித் தொடர் பாளர் பவன் கெரா குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.
‘பாரத் நெட்’ திட்டத்தின் இலக்கைஎட்ட ‘யூனிவெர்சல் சர்வீசஸ் ஆப்ளிகேசன் பண்ட்’ (Universal Services Obligation Fund - USOF), பாரத் பிராட்பேண்ட் நெட்ஒர்க் லிமிடெட் (Bharat Broadband Network Limited - BBNL) மற்றும் காமன் சர்வீசஸ் சென்டர் (Common Services Centre - CSC) ஆகிய மூன்று வெவ் வேறு துறைகளுக்கு இடையே ஒளிவடக் கம்பி, தொலைத்தொடர்பு சாதனங்களை நிறுவுவது, பராமரிப்பது குறித்து 2019 ஜூலை மாதம் ஒப்பந்தம்கையெழுத்தானது.‘யூனிவெர்சல் சர்வீசஸ் ஆப்ளிகேசன் பண்ட்’ (USOF) நிறுவனத்திற்கு55 ஆயிரம் கோடி ரூபாய் நிதியும்ஒதுக்கப்பட்டது. ஒளிவடக் கம்பி(Optical Fibre Cable) புதைப்பது,தொலைத்தொடர்பு சாதனங்களை நிறுவுவது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு தனியார் நிறுவனங்களை ஒப்பந்தம் செய்த ‘காமன் சர்வீசஸ் சென் டர்’ நிறுவனங்களைப் பற்றி எந்த ஒருஆய்வும் செய்யாமல் பணிகளை வழங்க ஒப்பந்தம் செய்திருக்கிறது.
இந்த நிறுவனங்கள் மூலம் பல்வேறு செலவினங்களில் பல கோடிரூபாய் எந்தவித தணிக்கையும் இல்லாமல் வாரி வழங்கப்பட்டிருக்கிறது. “மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள பொதுச் சேவை மையங்களுக்கு (சிஎஸ்சி)2019 ஜூலை முதல் 2020 டிசம்பர்வரை பெரும் பணம் செலுத்தப்பட்டுள் ளது” என சிஏஜி சுட்டிக்காட்டியுள்ளது.ஜூலை 2019 முதல் டிசம்பர் 2020 வரை உள்ள காலகட்டத்தில் ரூ. 386 கோடியே 42 லட்சம் மற்றும் ரூ. 116 கோடியே 50 லட்சம் என இருமுறைவழங்கப்பட்டிருக்கும் பணத்திற்குஉரிய கணக்கு சமர்பிக்கப்படவில்லை. மேலும், பல பணிகளை செய்யாமலே செய்ததாக கூறியும் முறைகேடு அரங்கேறியுள்ளது. பாரத்நெட் திட்டத்தைப் பயன்படுத்தி இந்த மூன்றுதுறைகள் மூலம் பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக மத்திய தணிக்கைத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.“பாரத்நெட் பணிகளை முடிப்பதில் தாமதம் ஏற்பட்டதற்காக யுனிவர்சல் சர்வீஸ் ஆப்ளிகேஷன் ஃபண்ட்(யுஎஸ்ஓஎப்) சிஎஸ்சிக்கு அபராதம்விதிக்க முடியாத நிலை உள்ளது;ஏனெனில், தவறுகளை மீட்டெடுப்பதற்கான காலக்கெடு மற்றும் தண் டனை விதிமுறைகள் ஒப்பந்தத்தில் இணைக்கப்படவில்லை” என்பதையும் தணிக்கைத்துறை கண்டுபிடித் துள்ளது.
இவற்றை முன்வைத்தே காங்கிரஸ் கட்சியின் மூத்த செய்தித் தொடர்பாளர் பவன் கெரா மோடி அரசுக்கு கேள்விகளை எழுப்பியுள்ளார்.‘தணிக்கைத் துறையின் இந்தஅறிக்கை காரணமாகவே தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்த ரவிசங்கர் பிரசாத்தின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டதா?’ என்பதை பிரதமர் தெளிவுபடுத்த வேண்டும் என்று கூறியுள்ள பவன் கெரா, “அரசுத்துறைகள் மூலம் பலகோடி ரூபாய்ஊழல் நடந்திருக்கும் ‘பாரத் நெட்’ஊழலுக்கு ரவிசங்கர் பிரசாத்தை மட்டுமே பொறுப்பாக்கி ‘பலிகடா’ ஆக்கியிருப்பதன் மூலம், பிரதமர் நரேந்திர மோடி தன்னை அப்பழுக்கற்றவர் என்று காண்பிக்க முயற்சி செய்கிறார்” என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.“இந்த ஊழலில் தொடர்புடைய நிறுவனங்கள் மீது, என்ன நடவடிக்கைஎடுக்கப்பட உள்ளது? என்பதை பிரதமர் மோடி நாட்டு மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். ஏனெனில், மக்கள்வரியாக செலுத்தும் ஆயிரக்கணக் கான கோடி ரூபாய் ‘பாரத் நெட்’ திட்டத்தில் சூறையாடப்பட்டுள்ளது. இதனை பதவியில் இருக்கும் நீதிபதி மூலம் நியாயமான விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்” என்றும் கெராவலியுறுத்தியுள்ளார்.