லக்னோ:
உத்தரப் பிரதேசத்தில் பாஜக தொடர்ந்து கலவர அரசியல் நடத்தும் மையங்களாக அயோத்தி,மதுரா, வாரணாசி ஆகிய இடங் கள் உள்ளன. அயோத்தியில் ராமர் கோயிலை முன்வைத்தும், மதுராவில் கிருஷ்ண ஜென்மபூமி பிரச்சனையைக் கிளப்பியும், வாரணாசியில் கியான்வபி மசூதி பிரச்சனையை தூண்டிவிட்டும் மத ரீதியிலான பிரிவினையை ஏற்படுத்தி பாஜக இங்கு பெரும் பான்மை மக்களின் வாக்குகளை அறுவடை செய்து வந்தது.
இந்நிலையில், கடந்த வாரம்இந்த மாவட்டங்களில் நடைபெற்றஉள்ளாட்சித் தேர்தலில் மக்கள் பாஜகவை மண்ணைக் கவ்வச் செய்துள்ளனர்.உத்தரப்பிரதேச மாநிலத்தின் 75 மாவட்டங்களில் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புக்களுக்கான தேர்தல், கடந்த ஏப்ரல் 16-இல் துவங்கி ஏப்ரல் 29 வரை நான்கு கட்டங்களாக நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை எண் ணப்பட்ட நிலையில், பாஜகவுக்குசெல்வாக்கு மிகுந்த அயோத்தி, வாரணாசி, மதுரா, கோரக்பூர் ஆகிய முக்கியமான மாவட்டங்களிலேயே அந்தக் கட்சி படுதோல்வி அடைந்துள்ளது.
அயோத்தியில் 40 மாவட்ட ஊராட்சி வார்டுகள் இருக்கும் நிலையில், 34 இடங்களில் பாஜக தோல்வி அடைந்துள்ளது. இங்கு அகிலேஷ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி 24 இடங்களையும், மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி 5 இடங்களையும் வென்றுள்ளன.பிரதமர் நரேந்திர மோடியின் மக்களவைத் தொகுதியான வாரணாசியில், மொத்தமுள்ள 40 இடங்களில் 33 இடங்களில் பாஜக படுதோல்வி அடைந்துள்ளது. இங்கு 15 இடங்களை சமாஜ்வாதி கட்சி கைப்பற்றியுள்ளது.
லக்னோவிலுள்ள 25 வார்டுகளில் 22 இடங்களில் பாஜக தோற்றுள்ளது. இங்கு சமாஜ்வாதி கட்சி10 இடங்களையும், பகுஜன் சமாஜ்கட்சி 5 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. பாஜகவுக்கு வெறும்3 இடங்கள் மட்டுமே கிடைத்துள் ளன.அதேபோல முதல்வர் ஆதித்யநாத்தின் சொந்த மாவட்டமான கோரக்பூரில், மொத்தமுள்ள 68 வார்டுகளுக்கான வாக்கு எண்ணிக்கை முழுமையாக முடிவடையாத நிலையில், பாஜக 20 இடங்களையும், சமாஜ்வாதி 19 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. மதுராவைப் பொறுத்தவரை, அங்கு மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியே முன்னிலையில் உள்ளது.உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு இன் னும் 8 மாதங்கள் மட்டுமே உள்ளநிலையில், உள்ளாட்சித் தேர்தலில் கிடைத்துள்ள இந்த தோல்வி,பாஜகவினரை கலக்கமடையச் செய்துள்ளது.