india

img

மத வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தை ஒழித்துக்கட்ட முயற்சி.... அஸ்வினி உபாத்யாயா மூலம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு....

புதுதில்லி:
பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் பின்னணியில், முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் ஆட்சிக் காலத்தில் 1991-இல்கொண்டுவரப்பட்டதுதான் மத வழிபாட்டுத் தலங்கள் சட்டம்.  1947-ஆம் ஆண்டுக்கு முந்தைய வழிபாட்டுத் தலங்கள், தற்போதுள்ள நிலையில் அப்படியே தொடரும். அதன் மீது யாரும் உரிமை கோர முடியாது என்றுஇந்தச் சட்டம் கூறியது.அதாவது, இங்கு முன்பு கோயில்இருந்தது, மசூதி இருந்தது ஒவ்வொருவரும் அவரவருக்கு ஏற்ப பிரச்சனைகளைக் கிளப்புவதைத் தடை செய் தது.

ஆனால், ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மத வழிபாட்டுத் தலங்களை மீட்பதை இந்தச் சட்டம் தடுக்கிறது என்று கூறி, மத வழிபாட்டுத் தலங்கள்சட்டம்- 1991ஐ ஒழித்துக் கட்டுவதற்குநீண்டகாலமாகவே சங்-பரிவார் அமைப்புக்கள் முயற்சி செய்து வருகின்றனர். ராமர் கோயில் கட்டுதல், பிரிவு 370 நீக்கம், குடியுரிமைச் சட்டம்என்று வரிசையாக தங்களின் நிகழ்ச்சிநிரலை அமல்படுத்தி வரும் நிலையில், மத வழிபாட்டுத் தலங்கள் சட்டத்திற்கும் மோடி ஆட்சியிலேயே முடிவுகட்ட சங்-பரிவாரங்கள் தீவிரமாக உள்ளன.

இதற்காக, பாஜக மூத்த தலைவரும் வழக்கறிஞருமான அஸ்வினி உபாத்யாயா மூலம் அண்மையில் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றையும் தாக்கல் செய்தன.அதன்படி “மத வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991, அரசியல் சாசனத்துக்கு எதிரானது. ஆக்கிரமிப்பாளர் களிடம் இருந்து மத வழிபாட்டுத் தலங்களை மீட்பதை இந்த சட்டம் தடுக்கிறது. ஒரு மத வழிபாட்டுத் தலத்தை மற்றொருவர் பிடித்துக் கொண்டால் அதற்கு மீண்டும் உரிமைகோர முடியவில்லை. இந்தச் சட்டம்இந்து, ஜெயின், பவுத்தம், சீக்கிய மதத்தினருக்கு எதிராக உள்ளது. முகலாய மன்னர்கள் ஆட்சிக் காலத்தில்ஏராளமான வழிபாட்டுத் தலங்கள் இடிக்கப்பட்டு மசூதிகள் கட்டப்பட் டன.

அந்த வழிபாட்டுத் தலங்களை இதுவரை மீட்க முடியவில்லை. எனவே,மத வழிபாட்டுத் தலங்கள் சட்டம்1991-ஐ நீக்க வேண்டும்” என்று அஸ் வினி உபாத்யாயா கூறியிருந்தார்.இந்த மனு தலைமை நீதிபதிஎஸ்.ஏ. பாப்டே, நீதிபதி போபண்ணாஅமர்வு முன்பு வெள்ளிக்கிழமையன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் அஸ்வினி உபாத்யாயா சார்பில்மூத்த வழக்கறிஞர்கள் விகாஷ் சிங், சங்கர நாராயணன் ஆஜராகினர். அவர்கள், “மதவழிபாட்டுத் தலங்கள் சட்டத்தில் இருந்து அயோத்தி ராமஜென்ம பூமிக்கு விலக்கு அளிக்கப் பட்டிருக்கிறது. ஆனால் கிருஷ்ணரின் ஜென்ம பூமியான மதுராவுக்கு விலக்கு அளிக்கப்படவில்லை. பகவான் கிருஷ்ணரின் ஜென்ம பூமியைமீட்க இந்துக்கள் நீண்ட காலமாகஅமைதி வழியில் போராடி வருகின்றனர். எனவே மதச்சார்பின்மைக்கு எதிராக உள்ள மத வழிபாட்டு தலங்கள் சட்டத்தை நீக்க வேண்டும்” என்று வாதிட்டனர்.அதனடிப்படையில், அஸ்வினி உபாத்யாயாவின் மனு தொடர்பாக பதில் அளிக்கக் கோரி மத்திய உள் துறை அமைச்சகம், மத்திய சட்ட அமைச்சகம், மத்திய கலாச்சார துறை ஆகியவற்றுக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.