india

img

உயிர்த்தியாகம் செய்த 350 விவசாயிகளுக்கு தில்லி சிங்கு எல்லையில் நினைவிடம்... நாடு முழுவதும் புனித மண் எடுத்துச் செல்லப்படுகிறது...

புதுதில்லி:
மோடி அரசு கார்ப்பரேட்களுக்கு ஆதரவாக கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் விவசாயிகள் போராட் டம் நடத்தி வருகின்றனர்.குறிப்பாக, தலைநகர் தில்லியில் 2020 நவம்பர் 26 துவங்கி, 130 நாட்களுக்கும் மேலாக திக்ரி, காஸிப்பூர், சிங்கு எல்லைகளை முற்றுகையிட்டு குளிர், மழை, வெயில்எதையும் பொருட்படுத்தாமல் லட்சக்கணக்கான விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கின்றனர். இந்தக் காலத்தில், 350-க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டக்களத் தில் தங்களின் உயிரை விட்டுள்ளனர். பலர் தற்கொலை செய்து கொண்டுள் ளனர்.

எனினும், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும்வரை இந்தப் போராட்டத்தைக் கைவிடப் போவதில்லை என்று விவசாயிகள் சங்கத் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.இதனிடையே, நாட்டையும், நாட்டின் விவசாயத்தையும், பாதுகாப்பதற்கான போராட்டத்தில் தங்களின்உயிரை ஈந்த 350 விவசாயிகளின் தியாகத்திற்கு அடையாளமாக சிங்கு எல்லையில்நினைவிடம் அமைக்கவும் விவசாயிகள் முடிவு செய் துள்ளனர்.இதற்காக, நாடு முழுவதும் இருந்து புனித மண் சேகரிக்கும் பணியையும் துவக்கியுள்ளனர். முதற்கட்டமாக, ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட மண், ரயில் மூலம்தில்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.