india

img

மலக்குழியில் மரணமடைந்த 340 பேர் 4 மாதத்தில் உயிர்பெற்றுவிட்டார்களா..? 5 ஆண்டுகளில் ஒரு உயிரிழப்புகூட இல்லை என மோடி அரசு புள்ளிவிவரம்....

புதுதில்லி:
நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் ஒரு மலக்குழி மரணம் கூட நிகழவில்லை என்று நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு அளித்துள்ள பதில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் ஜூலை 19 அன்று துவங்கி நடைபெற்று வருகிறது. பெகாசஸ் உளவு விவகாரம், பெட்ரோல்- டீசல், எரிவாயு விலை உயர்வு, விவசாயிகள் போராட்டம் நாடாளுமன்றத்தில் பற்றியெரியும் பிரச்சனைகளாக மாறியுள்ளது.இதனிடையே, சாக்கடைகள், கழிவுநீர்த் தொட்டிகள், மனிதக்கழிவுகளை சுத்தம் செய்யும் போது உயிரிழந்த வர்களின் விவரங்கள் குறித்து, நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, எல். ஹனுமந்தய்யா ஆகியோர் எழுப்பிய கேள்விக்கு, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் ராமதாஸ் அத்வாலே பதில் ஒன்றை அளித்துள்ளார். அதில், “கடந்த 5 ஆண்டுகளில் இது போன்ற இறப்புகள் ஒன்றுகூட பதிவாகவில்லை” என்று கூறி  சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போதும், இதே கேள்வி நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்டு இருந்தது. அப்போது, “கடந்த ஐந்து ஆண்டுகளில், சாக்கடைகள், கழிவுநீர்த் தொட்டிகள், மனிதக் கழிவுகளை சுத்தம் செய்யும் பணிகளின்போது 19 மாநிலங்களில் மட்டும் 340 பேர் உயிரிழந்துள்ளனர்” என்று ஒன்றிய அரசு புள்ளிவிவரம் அளித்திருந்தது.ஆனால், மழைக்காலக் கூட்டத்தொட ரில் எழுப்பப்பட்ட அதே கேள்விக்கு, ஒரு மரணம் கூட நிகழவில்லை என மோடி
அரசு பதிலளித்துள்ளது. நான்கு மாதத்திற்கு உள்ளாகவே- அதுவும் நாடாளுமன்றத்திலேயே புள்ளிவிவர மோசடியை மோடி அரசு அரசு அரங்கேற்றியுள்ளது.