india

img

18 கோடியே 4 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது....

புதுதில்லி:
இந்தியாவில் இதுவரை கொரோனா தடுப்பூசி போடப்பட்டவர்கள் குறித்த விவரத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.  18 கோடியே 04 லட்சத்து 57 ஆயிரத்து 579 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.இந்தியாவில் கடந்த ஜனவரி 16 முதல் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.    முதல் கட்டமாக சுகாதார பணியாளர்கள் மற்றும்  கொரோனா முன் கட்ட பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.  மார்ச் 1 முதல் இரண்டாம் கட்ட தடுப்பூசி  போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்டத்தில் முதலில் 60 வயதைத் தாண்டியவர்களுக்கும் 45 வயதைத் தாண்டி இணை நோய் உள்ளவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.  அதன்பிறகு ஏப்ரல் 1 முதல் 45 வயதைத் தாண்டிய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படு வருகிறது.

மூன்றாம் கட்டமாக 18 வயதைத் தாண்டியவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி மே மாதம் 1 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது.  போதுமான அளவு தடுப்பூசி மருந்து இல்லாததால் மிகச் சில இடங்களில் மட்டுமே இந்த பணி தொடங்கப்பட்டுள்ளது. நாட்டில் பல்வேறு  அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதுமான தடுப்பூசி இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் மக்களுக்கும் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் நடைபெறுகிறது. இப்பிரச்சனையில் மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும் என்று அரசியல் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.  

மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை சனிக்கிழமையன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  இதுவரை 18 கோடியே 04 லட்சத்து 57 ஆயிரத்து  579 டோஸ்கள் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.