தில்லி யமுனை ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவை அம்மாநில காவல்துறை பிறப்பித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை வட இந்தியாவில் தீவிரமடைந்துள்ளது. இமாசல பிரதேசம், உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம், தில்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தில்லியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், யமுனை ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து யமுனை ஆற்றின் அருகே உள்ள பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவை அம்மாநில காவல்துறை பிறப்பித்துள்ளது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.