அமெரிக்கா,செப்.24- அமெரிக்காவில் உள்ள ஸ்டேன் ஃபோர்டு பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள உலகின் சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அசோக் குமாரின் பெயர் இரண்டாவது முறையாக இடம்பெற்றிருக்கிறது.
நீலகிரி மாவட்டத்தின் பந்தலூர் பகுதியைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்களின் மகனாகப் பிறந்து அரசுப் பள்ளியில் கல்வியைத் தொடங்கிய அசோக் குமார் திருச்சி, கோவையில் உயர் படிப்பைத் தொடர்ந்தார். மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். சென்னையில் உள்ள தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் கழிவு மேலாண்மை மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையின் தலைவராக இருக்கிறார். ஆய்வுக்கட்டுரைகளுக்கு ஆசிரியராகவும், விஞ்ஜ்னானி, ஆராய்ச்சியாளர் எனப் பன்முகங்களைக் கொண்டவர்.
அதுமட்டுமல்லாமல் தாய்லாந்து மற்றும் ஐரோப்பிய பல்கலைக்கழகங்களில் வருகை பேராசிரியராகவும்(visiting professor) இருந்து வருகிறார்.
ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் உள்ள ஸ்டேன் ஃபோர்டு பல்கலைக்கழகம் வெளியிடக்கூடிய உலகின் சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் கடந்த முறையும் அசோக் குமாரின் பெயர் இடம்பெற்றிருந்த நிலையில் 2023-2024 ஆம் ஆண்டுக்கான பட்டியலிலும் இரண்டாவது முறையாக இவரது பெயர் இடம்பெற்றிருக்கிறது.
ஒரு தொட்டட்டத்தொழிலாளியின் மகனாகப் பிறந்து தன்னுடைய சடின உழைப்பினால் சாதனை படைத்த முனைவர். அசோக் குமாரை பலரும் பாராட்டி வருகின்றனர்.
இதுகுறித்து முனைவர் அசோக் குமார் கல்வியில் விடாமுயற்சி இருந்தால் ஏழ்மை தடையாக இருக்காது. கல்வி ஒன்றை மட்டுமே நம்பினால் வெற்றி உறுதி எனக் கூறியுள்ளார்