ராமேஸ்வரம்,டிசம்பர்.24- தமிழ்நாடு மீனவர்கள் 17 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கச்சத்தீவு - நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த தமிழ்நாட்டு மீனவர்கள் 17 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மீனவர்களின் 2 படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.