பாட்னா:
பீகாரில் ஊழல் கட்டுக் கடுங்காமல் போய்விட்டது. பணம் கொடுக்காமல் எந்த வேலையும் நடப்பதில்லை என்று ஆளும் ஐக்கிய ஜனதாதளம் கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஒருவரே குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.பீகார் மாநிலத்தில் சமூகநலத்துறை அமைச்சராக இருப்பவர் மதன் சாஹ்னி. இவர்தான் “தனது துறையில்சில நியமனங்களுக்கும் பணிமாறுதல்களுக்கும் அமைச்சர் என்ற முறையில், தான் ஒப்புதல் அளித்த பிறகும்அதிகாரிகள், அந்தப் பரிந்துரைகளைக் கிடப்பில் போட்டுள்ளனர்” என்று அதிருப்திதெரிவித்துள்ளார்.“பாட்னாவில், ஒரு வீடும் காரும் பெறுவது ஒருவரை அமைச்சராக்காது” என்று கூறியுள்ள அவர், “சனிக்கிழமை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய விருக்கிறேன்.அதற்கான கடிதத்தை தயார் செய்து வருகிறேன்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, தங்களின் சொந்த சாதிக்காரர்களை அதிகாரிகளாக நியமிக்க வேண்டும்என்று நிர்ப்பந்தம்வருகிறது. எம்எல்ஏ-க்களும், அமைச்சர்கள் லஞ்சம் வாங்கிக்கொண்டு, பணிநியமனம், இடமாற்றத்திற்கு உத்தரவிடு கின்றனர் என்று அதிகாரிகள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பாஜக எம்எல்ஏ-வான ஞானேந்திர சிங் கயானு என்பவரும் இதே கருத்தை விமர்சனத்தை எழுப்பியுள்ளனர். பாஜக எம்எல்ஏ-க்கள் அதிகம் லஞ்சம் வாங்குவதாகவும் அவர் கூறியுள்ளார்.