பாட்னா:
“பீகாரில் ஆளும் பாஜக - ஐக்கிய ஜனதாதளம் கூட்டணி அரசு எந்த நேரத்திலும் கவிழும்; எனவே, அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு தயாராகஇருங்கள்” என்று ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியினரை, அக்கட்சியின் தலைவர் தேஜஸ்வி கேட்டுக் கொண்டுள்ளார்.பீகார் சட்டப்பேரவையில், பாஜக தலைமையிலான கூட்டணிக்கு 125 எம்எல்ஏ-க்களும் ஆர்ஜேடி - காங்கிரஸ் கூட்டணிக்கு 110 எம்எல்ஏ-க்களும் உள்ளனர். பாஜக-வின் கூட்டணி கட்சிகளான விகாஸீல் இன்சான் கட்சி (விஐபி), ஹிந்துஸ்தான் ஆவாம் மோர்ச்சா, (எச்ஏஎம்) கட்சிகளுக்கு 8 எம்எல்ஏ-க்கள்உள்ளனர்.
ஆனால், இவர்கள் தற்போது அதிருப்தியில் உள்ளனர். கூட்டணியில் இருக்கும்போதே அருணாச்சலப் பிரதேசத்தில் தங்களின் 6 எம்எல்ஏ-க்களை பாஜக ‘களவாடியது’ உள்ளிட்ட விஷயங்களால் ஐக்கிய ஜனதாதளம் கட்சியும் பழிவாங்குவதற்கு சரியான நேரத்தை பார்த்துக் கொண்டிருக்கிறது.இந்நிலையில்தான், தமது கட்சியினருக்கு ராஷ்ட்ரிய ஜனதாதளம் தலைவர் தேஜஸ்வி சுற்றறிக்கை ஒன்றை அனுப்பிஉள்ளார். அதில் “அடுத்த சிலமாதங்களில் பீகார் அரசியலில் எதுவும் நிகழக் கூடிய சாத்தியங்கள் இருக்கின்றன. அதனால் ஆர்ஜேடி நிர்வாகிகள்அடுத்த கட்ட நடவடிக்கை களுக்கு தயாராக இருக்க வேண்டும்” என எச்சரிக்கை செய்துள்ளார்.ஆனால் “ஆர்ஜேடி கட்சிநிர்வாகிகள், கட்சி தாவாமல் இருக்கத்தான் இப்படி ஒரு தகவலை தேஜஸ்வி பரப்பிவருகிறார்” என்றும் “பாஜக- ஜேடியூ கூட்டணி அரசு ஒருபோதும் கவிழாது” என்றுஅந்தக் கூட்டணியின் தலைவர்கள் சமாளித்துள்ளனர்.